"எங்கே குண்டு போடப்போகிறார்கள்? என்ன நடக்கிறது?" - சிகப்பாக மாறிய வானம்! ரத்தக்காடாக மாறுகிறதா காஸா?

இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் மற்றும் குண்டு மழையால் காஸா நகரமே உருக்குலைந்து வருகிறது. ஏற்கனவே 2 லட்சம் குடியிருப்புகள் இந்த போரால் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று உலகத்தின் தொலைத்தொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ்
இஸ்ரேல் - ஹமாஸ்PT

இஸ்ரேல் - காஸா இடையே நடந்து வரும் போரில், காஸா பகுதி மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதலையும், குண்டு மழையையும் பொழிந்து வருகிறது இஸ்ரேல். முதல்நாள் தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 1,400 பேர் பலியான நிலையில், ஹமாஸை முழுமையாக அழிப்போம் என்று சபதமெடுத்து காஸா மீது கோர தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் அரசு. ஹாமாவை ஒட்டுமொத்தமாக ஒழிக்க நிலி என்ற தனிக்குழு ஒன்றையும் சமீபத்தில் உருவாக்கியிருந்தது இஸ்ரேல்.

20 நாட்களை கடந்துள்ள இந்த போரில், உட்சபட்சமாக சாதரண பொதுமக்களையும் பொருட்படுத்தாமல், உலகத்தின் தொலைத்தொடர்புகள் அனைத்தும் இன்று முடக்கப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்சுக்கு கூட அழைக்க முடியாமலும், அருகில் இருப்பவர்களிடம் கூட பேச முடியாமலும், வானம் முழுவதுமே குண்டுகள் துளைத்தலால் சிகப்பாக மாறி காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்கே குண்டு போடப்போகிறார்கள்? என்ன நடக்கிறது? எங்கே இருக்கிறோம்?

" நாங்கள் அல்-அக்ஸா மருத்துவமனையில் இருக்கிறோம். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. WIFI, தொலைத்தொடர்பு சேவை என எதுவுமில்லை. ஆம்புலன்ஸுக்கோ, வேறு விஷயங்களுக்கோ யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

குண்டுகளிலிருந்து வரும் வெளிச்சம் மட்டுமே வானத்தை பிரகாசமாக்கிக்கொண்டிருக்கிறது. 500 மீட்டர் தொலைவில் இருப்பவர்களைக்கூட எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆம்புலன்ஸ் வைத்திருப்பவர்களும், மருத்துவப் பணியாளர்களும் எந்த இடங்களில் குண்டுகள் போடப்படுகிறதென செய்தியாளர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சென்று காப்பாற்ற வேண்டும் என இந்த நிலையிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், செய்தியாளர்களுக்கே என்ன நடக்கிறது என தெரியவில்லை. நாங்கள் நடப்பதை சொல்லவே விரும்புகிறோம். ஆனால், என்ன நடக்கிறது என புரியாத சூழலில் தான் நாங்களே இருக்கிறோம். " என காஸா மருத்துவமனையில் இருக்கும் ஒரு செய்தியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com