இறந்த பூனையை பாதுகாத்த பெண்: சமூக ஊடகங்களில் வைரல்
மேகன் ரிலே தனது இறந்த பூனையை உறைய வைத்து, அதன் நினைவுகளை தன்னுடன் வைத்திருக்க முடிவு செய்துள்ளார். இந்த முடிவு சமூக ஊடகங்களில் வைரலாகி, பலரின் விமர்சனத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளது. பலர் இதை மோசமான முடிவாகக் கருதினாலும், சிலர் அவரின் துக்கத்தை புரிந்துகொண்டனர். மேகன் தனது பூனையை பாதுகாப்பாக வைத்திருப்பது அவருக்கு அமைதியைத் தருகிறது என கூறினார்.
நியூயார்க்கைச் சேர்ந்த அந்த பெண் செல்ல பிராணியாக ஒரு கருப்பு பூனையை வளர்த்து வந்துள்ளார்.. திடிரென அந்த பூனை இறந்து விடவே, அதனை விட்டு பிரிய மனம் இல்லாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளார்.. அதனால் அவர் செய்த காரியம் என்ன தெரியுமா? தனது செல்ல பிராணியான பூனையை விட்டு பிரிவது என்பது ஒருபோதும் நடக்காது என்றும் அவள் தனது பூனையை எப்போதும் தன் பக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஒரு விபரீத முடிவை எடுத்தார்.
உடல் துளைப்பாளராக பணிபுரியும் ( body piercer ) மேகன் ரிலே, தனது அன்புக்குரிய பூனையை எப்படி தன்னுடனேயே வைத்திருக்க போகிறேன் என்பதைக் காட்ட சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது...
அந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில், "என் இறந்த பூனையை என்னுடன் அன்பாக்ஸ் செய்" (Unbox My Dead Cat With Me) என்ற வாசகத்துடன் கூடிய கிளிப்பில், மேகன் ரிலே ஒரு பெட்டியை அவிழ்ப்பதைக் காணலாம். உள்ளே "சரியாகப் பாதுகாக்கப்பட்ட பூனை" அதாவது அவளுடைய இறந்த கருப்பு பூனை இருந்தது. அவள் கண்ணீருடன் இறந்த அந்த கருப்பு பூனையை கட்டிப்பிடித்து அதன் ரோமங்களைத் தடவுவதை வீடியோவில் பார்க்கலாம்.. பின்னர் மேகன் ரிலே அதை தனது வீட்டில் ஒரு அலமாரியின் ஷொகேஷில் வைத்து அதன் தலையில் முத்தமிட்டார்.
வீடியோவின் தலைப்பில் மேகன் ரிலே, தான் ஏன் இறந்த பூனையை இப்படி பாதுகாப்பாக வைத்தேன் என்பதை விளக்கினார். "நீங்கள் எதையாவது மிகவும் நேசிக்கும்போது, அதை நீங்கள் புதைக்க மாட்டீர்கள். நீங்கள் அதைப் பாதுகாக்கதான் நினைப்பீர்கள்.. நானும் அதைதான் செய்தேன். ஆம் என் இறந்த கருப்பு பூனையை உறைய வைத்து பின் அதை உலர்த்தி என்றென்றும் என்னுடனேயே இருக்குமாறு வைத்துக் கொண்டேன்” என்றார்..
இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து, இருபது மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை இதுவரை பெற்றுள்ளது.. மேலும் பல சமூக ஊடக பயனர்கள் மேகன் ரிலேயின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.. அதில் ஒரு பயனர், "தனிப்பட்ட முறையில், இது மோசமான மற்றும் விபரீதமான முடிவு என நான் நினைக்கிறேன்" என்று கருத்து தெரிவித்தார்.
இன்னொருவர், "எப்படி இதைச் செய்ய முடியும்? உங்கள் இறந்த செல்லப்பிராணியை உங்கள் அலமாரியில் வைக்க அது கோப்பை கிடையாது.. இது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று. அவர்களும் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்" என கூறியிருந்தார். "இது நான் இன்ஸ்டாகிராமில் பார்த்ததிலேயே மிகவும் கொடூரமான விஷயம்," என்று வேறொருவர் கூறினார்.
"உங்கள் பூனைக்கு இதைச் செய்வது எவ்வளவு சுயநலமானது? இறந்தவர்களை அடக்கம் செய்து நினைவுகளில் வைத்திருப்பதுதான் செய்ய வேண்டிய விஷயம். உங்கள் சுயநல அன்பிற்காக அவற்றைப் பாதுகாக்காமல், அவற்றை இயற்கைக்கு எதிராக வைத்திருகிரீர்கள்" என்று தனது கருத்தை ஒரு பயனர் தெரிவித்தார். மேலும் ஒருவர் ” எனக்கும் என பூனையை ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் அவற்றின் சடலத்தை ஒரு கோப்பையைப் போல காட்சிக்கு வைக்கவில்லை" என்று கருத்து தெரிவித்தார்.
பலர் அவரை விமர்சித்தாலும், சில பயனர்கள் ரிலேயின் முடிவைப் புரிந்துகொண்டதாகத் தோன்றியது. ஒரு பயனர், "தற்போது மக்கள் அனைவரும் வித்தியாசமாக துக்கப்படுகிறார்கள். செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் செய்வது அசாதாரணமானது அல்ல. உங்கள் இழப்புக்கு நான் மிகவும் வருந்துகிறேன்." என்றார்..
மேலும், மேகன் ரிலே தனது கருப்பு பூனையை எப்படி உறைய வைத்தார் என்பதையும் அந்த இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பூனை செல்லப்பிராணி பாதுகாப்பு நிறுவனத்தால் (Animal Family Pet Preservation) பாதுகாக்கப்பட்டது என்றும் மேலும் அவர் கடந்த ஒரு வருடமாக பாதுகாக்கப்பட்ட செல்லப்பிராணியுடன் வசித்து வருகிறார் என்றும் பகிர்ந்துள்ளார். Meghan Riley with preserved black cat
அதனைதொடர்ந்து "இது எனக்கு அமைதியைத் தருகிறது, வலியை அல்ல. நான் இறக்கும் போது அவர் குப்பையில் போடப்பட மாட்டார் என்று நினைத்திருக்கும். அவர் என் விருப்பப்படி என்னை கவனித்துக் கொளகிறார்.. ஒரு விலங்குடன் இவ்வளவு ஆழமான பிணைப்பை நீங்கள் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் நன்றியுடன் இருங்கள். ஆனால் உங்களுக்குப் புரியாததை பற்றி மதிப்பிடாதீர்கள்," என்றும் ரிலே கூறினார்.
இந்த பாதுகாப்பு சட்டப்பூர்வமானதுதான்
மேகன் ரிலேயின் இந்த முடிவு பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், அது சட்டத்திற்குள் உள்ளது. FindLaw இன் படி, செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் தங்கள் விலங்குகளைப் பாதுகாக்கவோ அல்லது உலர்த்தி வைக்கவோ ( preserve or stuff ) அனுதிக்கப்படுகிறார்கள்.. அதற்கு செல்லப்பிராணி சட்டப்பூர்வமாகச் சொந்தமானதாக இருக்க வேண்டும்.. அது புலம்பெயர்ந்த பறவையாக இல்லாததாக இருந்தால் இந்த முறையை சட்டப்படி செய்துக் கொள்ளலாம் என்கிறது சட்டம்..