சென்னை | குழந்தைகளிடம் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாக கூறப்படும் நிலையில், அதை தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நகர்நல அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் சாலையோரங்கள், பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களில் டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சோழிங்கநல்லூர், அடையாறு மண்டலங்களில் 170க்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது மேலும் அதிகரித்து வருகிறது என்றும் மாநகராட்சி நகர்நல அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில், டெங்கு பாதிப்பை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் யாரிக்கேனும் டெங்கு நோய் பாதிப்பு குறித்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நோயின் அறிகுறிகள்
இந்த டெங்கு காய்ச்சல் அறிகுறியற்றதாக இருக்கலாம், அல்லது அறிகுறிகளுடனும் இருக்கலாம்.. அதில் முக்கியமாக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, மற்றும் தோல் அரிப்பு ஆகியவை அடங்கும்.
தடுப்பு நடவடிக்கைகள்
டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சென்னையில் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வருகிறது.. இந்த டெங்கு பரவுவதை தடுக்க சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்
1. முதலில் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.. அதற்கு , வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற நீர் தேங்கக்கூடிய இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்..
2. குழந்தைகளை கொசுக்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்தல், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுதல்.
3. வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும் மழை பெய்யும் நேரங்களில் சுத்தமாக பராமரிக்க வேண்டும்..
4. முக்கியமாக டெங்கு கொசு என்று அழைக்கப்படும் இந்த ஏடிஎஸ் கொசு சுத்தமான தண்னீரில்தான் முட்டையிடும். அதனால் கவனமாக குடிநீரக்கூட நன்றாக கொதிக்க வைத்துக் குடிப்பது நல்லது.
5. இந்த ஏடிஎஸ் கொசு பொதுவாக பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கிறது. அதனால் பகலில் பள்ளிகளிலோ அல்லது மற்ற இடங்களிலோ குழந்தைகளுக்கு கொசு கடிக்க வாய்ப்பு உள்ளது.. அதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு தேங்காய் எண்ணெய்யை உடலில் நன்றாக தடவி விட்டு அனுப்புவது நல்லதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..