’ரஷ்யாவைத் தாக்கினால்..’ அமெரிக்கா, NATO-க்கு எதிராக களத்தில் குதித்த சீனா.. திடீர் ஆதரவு ஏன்?

ரஷ்யாவுக்கு சீனா திடீர் ஆதரவு கொடுத்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா
அமெரிக்கா, சீனா, ரஷ்யாட்விட்டர்

ரஷ்யாவுக்கு சீன ராணுவம் திடீர் ஆதரவு 

’ரஷ்யாவைத் தாக்க அமெரிக்காவோ அல்லது நேட்டோ நாடுகளோ முடிவு செய்தால், எந்த இடத்திலும் ராணுவரீதியாகத் தலையிட தாம் தயாராக இருக்கிறது’ என சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாட்டு ஊடகங்களில் எல்லாம் இந்தச் செய்தி வைரலாகி வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தலைக் காண இருக்கும் அமெரிக்காவுக்கு சற்றே தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் இது, சீனாவுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் ரஷ்யாவுக்கு மேலும் கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லப்படுகிறது.

முன்பே எச்சரித்த ரஷ்ய அதிபர் புடின்

முன்னதாக, ரஷ்ய அதிபர் தேர்தலில் 3வது முறையாக வெற்றிபெற்றிருக்கும் விளாடிமிர் புடின், “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்குநேர் மோதிக்கொள்வது என்பது இந்த உலகம் மூன்றாம் உலகப்போரை எதிர்கொள்வதற்கு வெகு அருகில் நிற்கிறது என்று அர்த்தம். அத்தகைய சூழலை எவருமே விரும்பமாட்டார்கள். ஆனால், இந்த நவீன உலகத்தில் எதுவும் சாத்தியமே. ஆனால் உக்ரைனில் நேட்டோ படைகள் உள்ளன. அவற்றில் ஏற்கெனவே ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரெஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கே கொத்துக்கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றனர். சம்மபந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெற்றுக் கொள்வது நலம்” என எச்சரித்திருந்தார். இந்த நிலையில்தான், சீனாவின் மேற்கண்ட அறிவிப்பு ரஷ்யாவுக்கு மேலும் பலம் தருவதாக அமைந்துள்ளது.

இதையும் படிக்க: வர்ராங்க.. கொட்டு வாங்கறாங்க.. போறாங்க.. ரீப்பீட்டு! எஸ்.பி.ஐ Vs உச்சநீதிமன்றம்! என்னதான் நடக்குது?

சீனாவின் இந்தத் திடீர் அறிவிப்புக்கு முக்கியக் காரணம்!

உலகின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், நாசா உடன் இணைந்து பல திட்டங்களில் பணியாற்றி வருகிறது. அந்த வகையில், அமெரிக்க அரசின் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 100க்கும் அதிகமான உளவு செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் திட்டத்தில் ரகசியமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பணியாற்றி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்லிங்க் சேவைக்காக LEO செயற்கைக்கோள்களைத் தயாரித்து வருகிறது. இது பூமிக்கு மிகவும் அருகில் பறக்கக்கூடியவை. மேலும், இதை உளவு செயற்கைக்கோள்களாகவும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்குப் பெரும் மாற்றத்தைத் தரும் செயற்கைக்கோள்கள்!

இந்தச் செயற்கைக்கோள்கள் தரையில் உள்ள இலக்குகளைக் கண்காணித்து அந்த தரவுகளை அமெரிக்க உளவுத்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தெரிகிறது. ஆக, இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்குப் பெரும் பலத்தைச் சேர்க்க வழிவகை செய்யப்படும், குறிப்பாக தரையில் இருக்கும் பாதுகாப்புப் படைக்கு விண்ணில் இருந்து கூடுதல் தரவுகளை எளிதாக பகிர முடியும். மொத்தத்தில் இந்தச் செயற்கைக்கோள்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வெளியான 2 நாட்கள் கழித்துத்தான் சீனா, இத்தகைய முடிவை வெளியிட்டுள்ளது. அதாவது, ரஷ்யாவுக்கு ஆதரவு கொடுக்க சீனா முன்வந்துள்ளது.

இதையும் படிக்க: ஆளுநர் பதவி ராஜினாமா.. மீண்டும் தேர்தலில் களமிறங்கும் தமிழிசை.. புதுச்சேரியில் போட்டியா?

ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவை எதிர்ப்பது ஏன்?

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளும் அமெரிக்காவை எதிர்த்து வருகின்றன. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யா, தற்போது 2ஆம் உலகப்போருக்குப் பின் பிரிந்து நிற்கிறது. ஆனால், அமெரிக்காவோ தனக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளைக் கையில் போட்டுக்கொண்டு நேட்டோ என்ற பெயரில் சோவியத் யூனியனைப் போன்று ஒரு வலிமையான படைபலத்தை உருவாக்கி வருவதாக ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளால் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால்தான் நேட்டோவில் தன் அண்டை நாடுகள் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதன் விளைவாகவே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமாகப் போர் புரிந்து வருகிறது. உக்ரைனும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் அந்தப் போரை எதிர்த்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளில் அமெரிக்காவின் தலையீடு

மேலும் உலகின் ஏகாதிபத்திய சக்தியாக விளங்கும் அமெரிக்கா, தன் சொல்படிதான் பிற நாடுகள் நடக்க வேண்டும் என விரும்புகிறது. அதற்காக, தன்னை எதிர்க்கும் நாடுகளின் அண்டை நாடுகளை உசுப்பிவிட்டு போர்களில் ஈடுபட வைக்கிறது. அதற்கு உக்ரைன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் போர்களை உதாரணமாகக் கூறலாம். மேலும் உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவி வழங்குவது, தமது உளவுத்துறையை வைத்து நாட்டின் பிரதமர்களை மாற்றுவது, வளரும் நாடுகளைச் சுரண்டுவது உள்ளிட்ட செயல்களிலும் அமெரிக்கா ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பிரதமர் மாற்றம் குறித்த விவகாரத்தில் அண்டை நாடான இம்ரான் கான் ஆட்சி அகற்றப்பட்டத்தில் அமெரிக்க பெயர் அடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தேர்தல்பத்திர நன்கொடை: ரெய்டுக்குப்பின் ஓராண்டில் கோடிகளை அள்ளி வழங்கிய மாட்டிறைச்சி நிறுவனங்கள்!

அமெரிக்கா, சீனா, ரஷ்யா
நேட்டோவில் இணைந்த பின்லாந்தும்.. எச்சரிக்கும் ரஷ்யாவும்! உக்ரைன் போரே இன்னும் ஓயவில்லையே.. அதற்குள் அடுத்தா??

75 ஆண்டுகளாக நட்புறவில் இருக்கும் சீனா - ரஷ்யா

இப்படி, அமெரிக்காவின் வல்லாதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையிலேயே சீனாவும், ரஷ்யாவும் தற்போது கைகோர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் வடகொரியாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவும் சீனாவும் கடந்த ஆண்டுகளில் பலமுறை ஒத்துழைப்பை அதிகப்படுத்தியுள்ளன. கடந்த 75 ஆண்டுகளாக இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி செய்து பயணித்து வந்திருக்கிறது.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்தபோது, கச்சா எண்ணெய்யை ரஷ்யா குறைந்த விலைக்கு விற்றபோது அதை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பெற்று வருகின்றன. அந்த வகையிலும் சீனா ரஷ்யாவுக்கு கைகொடுத்து வருகிறது. அதாவது பொருளாதார ரீதியாகவும் சீனா உதவி செய்து வருகிறது. இப்படி, இரு நாட்டு உறவுகள் வலுவடைவது தொடர்ந்தால், அது அமெரிக்காவும் ஆபத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: ”முதலிடத்தில் பாஜக - ரூ.6,986 கோடி”-கொடுத்தது யார் என்பதை வெளியிடாத பிரதான கட்சிகள்! #ElectoralBonds

அமெரிக்கா, சீனா, ரஷ்யா
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நேட்டோ நாடுகள்; இந்தியா, சீனா நிலை என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com