வர்றாங்க.. கொட்டு வாங்கறாங்க.. போறாங்க.. ரீப்பீட்டு! எஸ்.பி.ஐ Vs உச்சநீதிமன்றம்! என்னதான் நடக்குது?

’தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களை மார்ச் 21ஆம் தேதிக்குள் எஸ்பிஐ முழுமையாக வழங்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.
உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.புதிய தலைமுறை

தேர்தல் பத்திரத்தைச் சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக இயற்றப்பட்ட சட்டத் திருத்தங்களை ரத்து செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை மூன்று வாரத்திற்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, நிறுவனங்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடைகள் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு, கடந்த மார்ச் 13ஆம் அளித்தது. அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 14ஆம் தேதி, தன்னுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது.

உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.
தேர்தல் பத்திரம் | SBI Vs SC | 4 சட்டத்திருத்தங்கள்.. வாரிவழங்கிய நிறுவனங்கள்.. இதுவரை நடந்தது என்ன?

அப்படி எஸ்பிஐ வழங்கிய தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயரைத் தவிர, பத்திரங்களின் வரிசை எண் இல்லை. இதனால், எந்தெந்த கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்கிற விவரத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. இது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: தேர்தல்பத்திர நன்கொடை: ரெய்டுக்குப்பின் ஓராண்டில் கோடிகளை அள்ளி வழங்கிய மாட்டிறைச்சி நிறுவனங்கள்!

உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.
2019 - 24 | 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை... 10 நாளில் 3,346... முழு விவரங்களையும் அளித்த SBI!

இதை அறிந்து மீண்டும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ’தேர்தல் பத்திரத்தின் எண்கள்தான் நன்கொடை பெறுபவரையும், அதனை வாங்குபவரையும் இணைக்கும் ஒன்று. அப்படி இருக்க, தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்ணை ஏன் வங்கி குறிப்பிடவில்லை? முழு விவரத்தினை எஸ்பிஐ வங்கி தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த விவரங்களை ஏன் வெளியிடவில்லை என்பதையும் எஸ்பிஐ வங்கி மார்ச் 18ஆம் தேதிக்குள் விளக்கமாக அளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், “இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர்கள் பெயர், பத்திர எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும், குறிப்பாக ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண்ணை வெளியிட வேண்டும். தேர்தல் ஆணையம் அதனை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். வெளியிட்ட பின் ‘எந்த தகவலும் விடுபடவில்லை’ என்பதை பிரமாணப் பத்திரமாக எஸ்பிஐ வங்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த முழுத் தகவலை அறிந்துகொள்ள கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.
உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.
தேர்தல் பத்திரம் | SBI Vs SC | 4 சட்டத்திருத்தங்கள்.. வாரிவழங்கிய நிறுவனங்கள்.. இதுவரை நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com