காஸாவை ஆளப்போவது யார்? போருக்குப்பின் நடக்கப்போவது என்ன? இஸ்ரேல் போட்ட திட்டம்!

இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வந்தால், அடுத்து காஸாவை யார் ஆள்வார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
hamas
hamasfile image

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரானது கிட்டத்தட்ட 40 நாட்களை எட்டியுள்ளது. இதில் காஸாவைச் சேர்ந்த 11 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இரு தரப்பிலும் போர் நிறுத்தம் குறித்த நிபந்தனைகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இந்த நேரத்தில் போர் முடிவுக்கு வந்தால், அடுத்து காஸாவை யார் ஆள்வார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

காஸாவை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல், 2005ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது. அதன் பிறகு 2007ம் ஆண்டு முதல் ஹமாஸ் காஸாவை ஆண்டு வருகிறது. ஹமாஸ் படைக்குழுவை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஒரு தீவிரவாத அமைப்பாக சித்தரித்து வருகின்றன. குறிப்பாக காஸா எப்போது ஹமாஸின் கட்டுக்குள் வந்ததோ, அதுமுதல் எல்லையில் கெடுபிடிகளை அதிகரித்து வைத்துள்ளது இஸ்ரேல். தற்போதும்கூட ஹமாஸை அழித்தே தீருவோம் என்று சூளுரைத்து இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வரும் நிலையில், போர் முடிவுக்கு பிறகு ஹமாஸ் தரப்பு பலம் நீடித்தால் அவர்களே அங்கு ஆட்சியில் தொடர வாய்ப்புள்ளது.

hamas
ம.பி.: "தரகரிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசும் மத்திய அமைச்சர் மகன்"- ராகுல் குற்றச்சாட்டு

ஆனால், சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனோ, “காஸாவின் அதிகாரம் ஹமாஸிடம் இருந்து வெஸ்ட் பேங்க் ஐ நிர்வகிக்கும் பாலஸ்தீன அதிகார சபைக்கு மாற்றப்பட வேண்டும்” என்றார். ஆனால், “வெஸ்ட் பேங்க், கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்களுக்கு அரசியல் தீர்வு கண்டால் மட்டுமே, பாலஸ்தீன அதிகார சபையால் காஸாவில் ஆட்சி அமைக்க முடியும்” என்கிறார் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ்.

மறுபுறமோ, “காஸாவை கைப்பற்றுவதும், அதை ஆள்வதும் எங்களது நோக்கம் அல்ல. ஹமாஸை அழிப்பது மட்டுமே இலக்கு என்கிறார் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு. இந்த சண்டை ஹமாஸுடன் மட்டுமே, காஸா மக்களுடன் இல்லை” என்று கூறும் அவர், “காஸாவில் மக்களாட்சி முறையில் ஒரு அரசு அமைக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

hamas
கல்லறையாக மாறி வரும் காசாவின் அல் - ஷிபா மருத்துவமனை - உலக சுகாதார அமைப்பு வேதனை

ஆனால், இந்த கருத்துக்களை ஏற்க மறுக்கும் லெபனானில் உள்ள ஹமாஸ் தலைவர் ஒசாமா ஹம்தான், “காஸாவில் ஒரு பொம்மை அரசை ஹமாஸ் ஒருபோது ஏற்காது. எப்போதும், காஸாவில் ஹமாஸ் அதிகாரத்தில் இருக்கும். அமெரிக்காவின் சதி திட்டங்களை நம்ப மாட்டோம்” என்கிறார். ஆக, போர் முடிவில் ஹமாஸே ஆட்சியில் இருப்பது, அல்லது பாலஸ்தீன அதிகார சபைக்கு கீழ் மாற்றப்படுவது அல்லது மக்களாட்சி முறையிலான அரசு போன்றவற்றுக்கே சாத்தியக்கூறுகள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com