ம.பி.: "தரகரிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசும் மத்திய அமைச்சர் மகன்"- ராகுல் குற்றச்சாட்டு

ம.பி.யில் மத்திய அமைச்சரின் மகன் ஒருவர், தரகரிடம் ரூ.500 கோடி பேரம் பேசியதாக வீடியோ ஆதாரம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தேவேந்திர பிரதாப் சிங் தோமர்
தேவேந்திர பிரதாப் சிங் தோமர்ட்விட்டர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அக்கட்சிகள் மாறிமாறி தேர்தல் அறிவிப்புகளை வெளியிடுவதுடன் எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சுமத்தியும் வருகின்றன.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா எம்.பியான நரேந்திர சிங் தோமர், மத்திய வேளாண் அமைச்சராக பதவி வகித்துவருகிறார்.

அவருடைய மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர் வீடியோ ஒன்றில் பணம் குறித்து பேரம் பேசும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அவர், ரூ.100 கோடி லஞ்சப் பரிவர்த்தனை தொடர்பாக இடைத்தரகர் ஒருவரிடம் பேசிய வீடியோ கடந்த வாரம் வெளியானது. இது, அம்மாநிலத்தில் பேசுபொருளாகியது. இந்த நிலையில் மீண்டும் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தேவேந்திர பிரதாப் சிங் தோமர் ரூ.500 கோடி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் தேவேந்திர சிங் தோமர் ரூ.500 கோடி ரூபாய்க்கு டீலிங் செய்கிறார் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா வீடியோ ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: "என் கண்களை என்னாலேயே நம்ப முடியல" - 6 பந்துகளில் 6 விக்கெட்... அசத்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்!

இதனிடையே அம்மாநிலத்தில் உள்ள ஹர்தா நகரில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ”மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன், இடைத்தரகர்களிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்க பேரம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் எவ்வித அச்சவுணர்வும் இன்றி வீடியோ அழைப்பில் அமைச்சரின் மகன் பேரம் பேசுகிறார். இந்த வீடியோவை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்திani

இந்த பேரம் தொடர்பாக நமது பிரதமர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை மத்திய அமைச்சர் வீட்டுக்கும், அவரது மகன் வீட்டுக்கும் செல்லுமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: ’ஒளியை மங்கவைத்த ஏழ்மை’ - அயோத்தி தீபோற்சவத்தின் மறுபக்கத்தை பகிர்ந்த அகிலேஷ் யாதவ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com