அபு முகமது அல்-ஜோலானி
அபு முகமது அல்-ஜோலானிஎக்ஸ் தளம்

சிரியா அரசைக் கவிழ்த்த கிளர்ச்சிப் படை.. சாத்தியமானது எப்படி? யார் இந்த அபு முகமது அல்-ஜோலானி?

பஷார் அல் அசாத்தின் வீழ்ச்சியை தலைநகரில் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வாகனங்களின் ஹாரனை ஒலித்து அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Published on

சிரியாவைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவந்த நிலையில் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கிளர்ச்சியாளர்கள் மெல்லமெல்ல முன்னேறி தற்போது தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றினர். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படையும், சிரியன் தேசிய ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழுவும் இணைந்து அசாத்தின் கால் நூற்றாண்டு ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளன. இதையடுத்து சிரியாவில் 13 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ளது. பஷார் அல் அசாத்தின் வீழ்ச்சியை தலைநகரில் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வாகனங்களின் ஹாரனை ஒலித்து அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் வளர்ந்தது எப்படி?

சிரியாவில் ஆட்சி கவிழ ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற கிளர்ச்சிக் குழுதான் காரணம். இந்தக் கிளர்ச்சிக் கூட்டணியின் தலைவராக இருப்பவர், அபு முகமது அல்-ஜோலானி. இவருடைய குழுதான் தொடக்கம் முதல் சிரியாவில் அசாத் அரசுக்கு எதிராக அங்கே கிளர்ச்சி செய்தது. இவருடைய குழுவிற்குக் கீழேயே இன்னும் சில படைகள் உள்ளன. அல்கொய்தாவின் நேரடி துணை அமைப்பாக 2011இல் ஜபத் அல்-நுஸ்ரா என்ற வேறு பெயரில் HTS உருவானது. இஸ்லாமிய அரசு (IS) என்ற சுய பாணியிலான குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி அதை உருவாக்கினார். அதிபர் அசாத்துக்கு எதிராக இருந்த குழுக்களில் இது மிகவும் தீவிரமானதாகச் செயல்பட்டது. ஐ.நா, அமெரிக்கா, துருக்கி மற்றும் பிற நாடுகளால் இது ஒரு பயங்கரவாத குழுவாக தடைசெய்யப்பட்டது. இன்றும் அப்படியே உள்ளது. ஆனால் அல்கொய்தா மற்றும் ஜபத் அல்-நுஸ்ரா என்ற அணிகளிலிருந்து விலகி, வேறு பல பிரிவுகளுடன் இணைந்து அபு முகமது அல்-ஜோலானி உருவாக்கிய அமைப்பே, இந்த ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்பு. இந்த அமைப்பு, இன்றும் அல்கொல்யாதாவுடன் உறவுகளைத் துண்டித்துவிட்டதா என்பதில் இன்னும் சந்தேகம் உள்ளது.

அபு முகமது அல்-ஜோலானி
உள்நாட்டுப் போர் | “சிரியா ஆட்சியைக் கவிழ்ப்பதே இலக்கு” - கிளர்ச்சியாளர்களின் தலைவர் சவால்!

யார் இந்த அபு முகமது அல்-ஜோலானி?

1982ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பிறந்தவர், ஜோலானி. அங்கு அவரது தந்தை 1989 வரை எண்ணெய் பொறியாளராக பணியாற்றினார். அந்த ஆண்டில், ஜோலானி குடும்பம் சிரியாவுக்குச் சென்ற நிலையில், டமாஸ்கஸின் மெஸ்ஸே பகுதியில் வசித்து வந்தது. ஜிஹாதியாக, ஜோலானியின் பயணம் ஈராக்கில் தொடங்கியது. 2003 அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பிற்குப் பிறகு, அவர் ஈராக்கில் உள்ள மற்ற வெளிநாட்டுப் போராளிகளுடன் சேர்ந்து, 2005இல், கேம்ப் புக்கா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் தனது ஜிஹாதித்துவ உறவை மேம்படுத்திக் கொண்டார். பின்னர் அபு பக்கர் அல்பாக்தாதியுடன் நெருக்கமானார். அவரின் மூலம் ஐஎஸ்ஐ தலைவரானார்.

அதன் ஒருபகுதியாக, ஜோலானி தலைமையில் 2011ஆம் ஆண்டில், ஐஎஸ்ஐயுடன் பிணைக்கப்பட்ட ஒரு ரகசியப் பிரிவான அல்நுஸ்ரா முன்னணி சிரியாவுக்கு அனுப்பப்பட்டது. 2012இல், நுஸ்ரா ஒரு முக்கிய சிறு சண்டைப் படையாக மாறியது. அது, IS மற்றும் அல்கொய்தா உறவுகளை மறைத்தது. ஈராக்கில் பாக்தாதியின் குழு, கடந்த 2013ஆம் ஆண்டு, அந்த இரண்டு குழுக்களையும் (ISI மற்றும் நுஸ்ரா) ஒன்றாக அறிவித்தபோது ஜோலானி எதிர்த்தார். அதிலிருந்து விலக ஆரம்பித்தார். அது பிளவுக்கு வழிவகுத்தது. எனினும், அல்கொய்தாவிற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகே நுஸ்ரா முன்னணியை HTS ஆக உருவாக்கினார்.

அபு முகமது அல்-ஜோலானி
சிரியா: புண்ணிய பூமியில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட வறுமை.. தற்போதைய நிலைக்கு என்ன காரணம்?

ஜோலானி சிரிய அரசைக் கவிழ்ப்பதற்கு என்ன காரணம்?

இவருடைய, நடவடிக்கையானது உள்ளூர் ஆதரவைப் பேணுவதற்கும், சிரியர்கள் மற்றும் கிளர்ச்சிப் பிரிவினரை அந்நியப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும் ஒரு முயற்சியாக இருந்தது. ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் அல்கொய்தா அமைதியாக இருந்தபோதும் 2015இல் ஜோலானி படை, இட்லிப் மாகாணத்தைக் கைப்பறியபிறகு ஆதரவளிக்கத் தொடங்கியது. ஆனாலும், அதன் உறவை அவர் முற்றிலும் விலக்கினார். இதைத் தொடர்ந்து 2017இல் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என தன்னுடைய கிளர்ச்சிப் படைக்கு மறுபெயரிட்டார். இது, சிரியாவில் புதிய அல்கொய்தா துணை அமைப்பான ஹுராஸ் அல்தின் உருவாவதற்கு வழிவகுத்தது.

அல்கொய்தாவிடமிருந்து பிரிவினை மற்றும் பெயர் மாற்றங்களை HTS பெற்றிருந்தாலும், UN, US, UK மற்றும் பிற நாடுகளால் அந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஜோலானியின் இருப்பிடம் பற்றிய தகவல் தருபவர்களுக்கு அமெரிக்கா டாலர் 10 மில்லியன் வெகுமதியாக தரப்படும் என அறிவித்தன. அவர் சிரிய அரசை வீழ்த்துவதற்கு பொதுமக்களும் ஒரு காரணம். அவர்களுடைய புயல் உள்ளிட்ட நெருக்கமான காலகட்டங்களில் அவர் நேரில் சென்று உதவியுள்ளார்.

அபு முகமது அல்-ஜோலானி
ரஷ்யாவில் உள்நாட்டுப் போர்? உண்மையில் அங்கு நடப்பது என்ன? வாக்னர் குழுவின் பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com