World Economic Forum
World Economic Forumpt web

2030-ம் ஆண்டுக்குள் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும்? குறையும்?.. தரவுகள் சொல்வதென்ன?

2030-ஆம் ஆண்டுக்குள் 17 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், 92 மில்லியன் வேலைவாய்ப்புகள் மாற்றப்பட்டு அதற்கு நிகராக 78 மில்லியன் புதிய வேலைகள் உருவாகும் என World Economic Forum (WEF) நடத்திய ஆய்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published on

எந்தெந்த துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்

2030-ஆம் ஆண்டுக்குள் 17 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், 92 மில்லியன் வேலைவாய்ப்புகள் மாற்றப்பட்டு அதற்கு நிகராக 78 மில்லியன் புதிய வேலைகள் உருவாகும் என World Economic Forum (WEF) நடத்திய ஆய்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தெந்த துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், எந்தெந்த துறைசார்ந்தவர்களின் வேலைவாய்ப்புகள் குறைய வாய்ப்பிருக்கிறது என பார்ப்போம்.

World Economic Forum (WEF) வெளியிட்டுள்ள Future of Jobs Report 2025 அறிக்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. ஜனவரி 2020-2025 ஆண்டுக்கான WEF Annual Meeting-க்கு முன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களிடையே நடத்திய ஆய்வில் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளனர். அதில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பொருளாதார அழுத்தங்கள், புவிசார் பொருளாதாரத்தில் நிகழும் மாற்றங்கள் போன்றவை தொழில்துறை மாற்றங்களுக்கான முக்கிய காரணிகளாக அமைகிறது.

World Economic Forum
யுஜிசி விதிமுறை சர்ச்சை|“RSS பயிற்சி பெற்றவர்கள் துணை வேந்தர்களாக வந்துவிடுவார்கள்” - பேரா. வீ.அரசு!

எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

செயற்கை தொழிநுட்பம், பெரிய தரவுகள் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்றவற்றிற்கான தொழில்நுட்பத் திறன் தேவைகள் விரைவான வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக மாறிவரும் வேலை சந்தையில் தொழில்நுட்பம் மற்றும் மனித திறன் இரண்டையும் இணைப்பது மிக முக்கியமானதாக இருக்கும்.

ஹெல்த் கேர் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் 2030ஆம் ஆண்டுக்குள் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வளர்ந்துவரும் துறைகளான AI and renewable energy போன்றவற்றில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த முன்னேற்றம் graphic designers உள்ளிட்ட சிலருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

விவசாயத் தொழிலாளர்கள், டெலிவரி ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட துறைகளில் 2030-ஆம் ஆண்டுக்குள் அதிகமான வேலை வளர்ச்சியைக் காணும். ஹெல்த் கேர் துறைகளில் மருத்துவப் பணியாளர்கள் போன்ற பணிகள் மற்றும் கல்விப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

World Economic Forum
“முதல்வர் ஸ்டாலின் நடித்த ஒரே ரத்தம் படம் எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது” - ஆ.ராசா எம்பி!

வேலை வாய்ப்புகள் குறையும் துறைகள் என்ன?

உலக அளவில் நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடுவர். அதில் 41 சதவீதம் automation காரணமாக பணியாளர்களை குறைக்க திட்டமிடும் வேளையில், 77 சதவீதம் தங்களது பணியாட்கள் திறன்களை தேவைக்கு ஏற்றவாறு அதிகரிப்பர்.

வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகள் என எடுத்துக்கொண்டால், விவசாயத்துறை மற்றும் அது சார்ந்த பணிகள், தொழிலாளர்கள், light truck அல்லது delivery services drivers, software and application developers, trades workers, shop salespersons போன்றவை அடங்கும்.

அதே போல, வேலைவாய்ப்புகள் குறையும் துறைகள் எனவும் சில இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதில் cashiers , ticket clerks, administrative assistants, executive secretaries, building caretakers, cleaners, and housekeepers, material-recording, stock-keeping clerks; printing மற்றும் அது சார்ந்த trades workers போன்றவை அடங்கும்

World Economic Forum
சிவகங்கை | கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்த வெளிநாட்டினர்!

2030-க்குள்AI மற்றும் big data , networks மற்றும் cybersecurity, technological literacy, creative thinking, leadership, talent management, analytical thinking, போன்றவற்றில் திறனை வளர்த்துக்கொள்வதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

World Economic Forum
சென்னை: திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டாக்டர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com