\
Indigo flight
Indigo flightANI

சவுதியில் போர் பதற்றம்.. இண்டிகோ விமானங்கள் ரத்து!

சவுதியில் பாதுகாப்பு நெருக்கடி காரணமாக அக்டோபர் 17 வரை இண்டிகோ விமானங்கள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 
Summary

சவுதியில் பாதுகாப்பு நெருக்கடி காரணமாக, அக்டோபர் 17 வரை ரியாத், ஜெட்டா, தம்மாம், மதீனா நகரங்களுக்கு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகள் விமான நிலையை இணையதளத்தில் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பாதுகாப்பே முதன்மை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் - M.மீரா

சவுதி அரேபியாவில் நிலவி வரும் பாதுகாப்பு நெருக்கடி காரணமாக, ரியாத், ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் அக்டோபர் 17-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், சவுதியில் நிலவும் சூழலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. விமானப் பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு, இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விமானத்தின் நிலையைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Airport attack
Airport attack Reuters

மேலும், பயணச்சீட்டு முன்பதிவின்போது வழங்கப்பட்ட தொடர்பு விவரங்கள் மூலம் பயணிகளுக்கு அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும், சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்காக வாடிக்கையாளர் சேவைக் குழுவைத் தொடர்புகொள்ளலாம் என்றும் இண்டிகோ கூறியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பே தங்களது முதன்மையான நோக்கம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Indigo flight
16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ! ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!

இதற்கிடையே, சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிப் படை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இது, கிங் காலித் விமான நிலையம் மீது ஒரே வாரத்தில் ஹவுதி நடத்திய 3-வது மற்றும் மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது.

smoke near Riyadh airport
smoke near Riyadh airport Reuters

திங்கள்கிழமை இரவு, ஏமனின் ஹவுதி அமைப்பினர் ரியாத் விமான நிலையத்தை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறினர். இதற்கு முன்னதாக, ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து அழித்ததாக சவுதி அரசு தெரிவித்திருந்தது.

தொடர்ந்து அதிகரிக்கும் தாக்குதல் அச்சுறுத்தல்களால் சவுதிக்கான விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Indigo flight
ஏர்போர்ட் மீது ஏவுகணைத் தாக்குதல்.. தொடரும் ஹவுதியின் 'Attack' பதிலடிக்கு தயாராகும் சவுதி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com