usa president donald trump appreciate on elon musk
எலான் மஸ்க், ட்ரம்ப்ராய்ட்டர்ஸ்

"புத்திசாலி" | மசோதா மீது தொடர்ந்து காட்டமான விமர்சனம்.. ஆனாலும் எலான் மஸ்கை பாராட்டிய ட்ரம்ப்!

எலான் மஸ்க் மசோதாவை கடுமையாக விமர்சித்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவரை "அற்புதமான மனிதர்" என்று பாராட்டியுள்ளார்.
Published on

அமெரிக்காவின் செனட் அவையில் ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) என்ற மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து எலான் மஸ்க் மறைமுகமாகச் சாடினார். தவிர, ட்ரம்பின் நிர்வாகப் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, இந்த மசோதா குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தார். இதன் காரணமாக அதிபர் ட்ரம்புவுக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. தன்னை விமர்சித்த மஸ்க்குக்கு எதிராக அவரது நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

usa president donald trump appreciate on elon musk
எலான் மஸ்க் - ட்ரம்ப்முகநூல்

இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயேக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் ட்ரம்பின் பெயர் இருந்ததாக எலான் மஸ்க் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த ட்ரம்ப், எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் தெரிவித்தார்.

usa president donald trump appreciate on elon musk
வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க்.. ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்! முடிவுக்கு வருகிறதா மோதல் போக்கு?

பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதை, அதிபர் ட்ரம்பும் இதை ஏற்றுக் கொண்டார். எனினும், மீண்டும் அந்த மசோதா குறித்து எலான் மஸ்க் சமீபத்தில் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

usa president donald trump appreciate on elon musk
எலான் மஸ்க், ட்ரம்ப்எக்ஸ் தளம்

எலான் மஸ்க் மசோதாவை கடுமையாக விமர்சித்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவரை "அற்புதமான மனிதர்" என்று பாராட்டினார். தவிர அவரை "புத்திசாலி" என்றும் ”எப்போதும் நன்றாகச் செயல்படுபவர்” என்றும் சான்றிதழ் வழங்கியுள்ளார். மேலும், ’பிக் பியூட்டிஃபுல்’ மசோதா தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை ஒப்புக்கொண்டதை ட்ரம்ப், "அவர் கொஞ்சம் வருத்தப்பட்டார், அது பொருத்தமானதல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

usa president donald trump appreciate on elon musk
வெள்ளை மாளிகையில் போதைப் பொருள் பயன்படுத்தினாரா எலான் மஸ்க்? - ஓபனாக ட்ரம்ப் சொன்ன பதில்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com