"இந்தியாவில் வெறுப்புப் பேச்சு, சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரிப்பு"- அமெரிக்கா குற்றச்சாட்டு!

”இந்தியாவில் வெறுப்புப் பேச்சு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்துள்ளது” என அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆண்டனி பிளிங்கன்
ஆண்டனி பிளிங்கன்எக்ஸ் தளம்
Published on

2023ம் ஆண்டுக்கான சர்வதேச மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது.

மதச் சமூகங்களுக்கு தனித்தனி சட்டங்கள் அமைப்பதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை (யு.சி.சி.) அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர், மற்றும் பழங்குடியின தலைவர்கள் மற்றும் சில மாநில அரசு அதிகாரிகள் எதிர்த்தனர். இது நாட்டை இந்து தேசமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: லாட்டரியில் ரூ.33 கோடி.. விழுந்தும் அனுபவிக்க முடியாத சோகம்.. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நபர்!

இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், "உலகெங்கிலும் வாழும் மில்லியன்கணக்கான மக்களுக்கு மதச் சுதந்திரம் இன்னும் மதிக்கப்படவில்லை. இந்தியாவில், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், வெறுப்புப் பேச்சுகள், சிறுபான்மை மதச் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிப்புகள் அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.

அதேநேரத்தில், உலகெங்கிலும் உள்ள மக்களும் மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கக் கடுமையாக உழைத்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க;சுறா தாக்குதல்.. கையைக் கடித்துச் சென்ற கொடூரம்.. ’பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ பட நடிகர் மரணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com