லாட்டரியில் ரூ.33 கோடி.. விழுந்தும் அனுபவிக்க முடியாத சோகம்.. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நபர்!

சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் நபர் ஒருவர், 4 மில்லியன் டாலர்களை வென்ற சிறிது நேரத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
heart attack
heart attackx page

எதிர்பாராதவிதமாக மனிதர் ஒருவர் அதிக சந்தோஷம் அடையும்போது மனதளவில் விபத்தையும் சந்திக்க நேரிடுகிறது. அப்படியான ஒரு சம்பவம்தான் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. லாட்டரியில் 33 கோடி ரூபாய் அடித்த சந்தோஷத்தில் ஒருவர், தடுமாற்றம் ஏற்பட்டு உயிரிழந்தார். ஆம், லாட்டரி அடித்த மகிழ்ச்சியை கேள்விப்பட்ட அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிங்கப்பூரில் உள்ள பே சாண்ட்ஸ் கேசினோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர், டாலர் 4 மில்லியன் (இந்திய ரூபாயில் சுமார் 33 கோடி) ஜாக்பாட் வென்றார். ஆனால் அதைக் கேட்ட சந்தோஷத்தில் அடுத்த நொடியே தரையில் சரிந்து விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்கு சூதாட்ட விடுதி ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த காணொலி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: 'ஜெய் ஹிந்து ராஷ்டிரா' To ’உதயநிதி வாழ்க’ - பதவியேற்பின் போது மக்களவையில் நடந்த சுவாரஸ்யங்கள்!

heart attack
கேரளாவில் வாங்கிய லாட்டரி சீட்டு - ரூ.20 கோடி பரிசை வென்ற புதுச்சேரி ஐயப்ப பக்தர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com