தமாயோ பெர்ரி
தமாயோ பெர்ரிஎக்ஸ் தளம்

சுறா தாக்குதல்.. கையைக் கடித்துச் சென்ற கொடூரம்.. ’பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ பட நடிகர் மரணம்!

பிரபல திரைப்பட நடிகரான தமாயோ பெர்ரி, சுறா கடித்ததால் தனது 48 வயதில் காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்: ஆன் ஸ்டிரேஞ்சர் டைட்ஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தவர் தமயோ பெர்ரி (49). இதுதவிர, வேறு சில படங்களிலும் நடித்துள்ளார். தவிர, இவர் அலைசறுக்கு விளையாட்டின் பயிற்சியாளராகவும் இருந்தார். மேலும், நீரில் எவரேனும் தவறி விழுந்துவிட்டால், அவர்களைக் காப்பாற்றிக் கொண்டுவரும் பணியையும் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி, ஹவாய் தீவில் லாயிக்கு அருகிலுள்ள மொகுவாயாவுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அவரை சுறா ஒன்று கடுமையாக தாக்கியுள்ளது. இதனை கவனித்த ஒருவர், அவசரகால சேவை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று பெர்ரியை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், அவருடைய உடல் பாகங்கள் (1 கை, 1 கால்) காணாமல் போயுள்ளன எனக் கூறப்படுகிறது. அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கடல் பாதுகாப்புத் துறையில் தன்னுடைய பணியை தொடங்கி தொடர்ந்து அதில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுறாவின் தாக்குதலுக்கு தமயோ பெர்ரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: லாட்டரியில் ரூ.33 கோடி.. விழுந்தும் அனுபவிக்க முடியாத சோகம்.. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நபர்!

தமாயோ பெர்ரி
தண்ணீரில் கை கழுவியவரை கடித்து இழுத்துச் சென்ற சுறா.. பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com