\
 US President Trump that put Zelenskyy in a tight spot
US President Trump that put Zelenskyy in a tight spotReuters

முடிவுக்கு வருமா ஜெலென்ஸ்கி ஆட்டம்? உக்ரைனுக்கு செக் வைத்த டிரம்ப்! திடீர் மோதலுக்கு காரணம் என்ன?

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு செக் வைக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ள கருத்து உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 
Summary

உக்ரைன்-அமெரிக்க மோதலால் ஜெலன்ஸ்க்கி ஆதரவை இழந்தார். ரஷ்யா-அமெரிக்க ஒப்பந்தம் உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாட்டை தீர்க்க உதவியது. டிரம்ப், உக்ரைனின் நடவடிக்கைகளை விமர்சித்து புதிய அதிபர் தேவை எனக் கூறினார்.

கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கின. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஆகியவையே ரஷ்யாவின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்த நிலையில், அதன் மீது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் பல்வேறு தடைகளை விதித்தன.

இதில் இருந்து தப்பிக்க ரஷ்யா குறைந்த விலைக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெயை விற்பனை செய்தது. ஆனால் இந்த நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது.

Reuters

இந்த போர் காரணமாக உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் உயிர் நாடியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதால் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அமெரிக்காவும் ஒரு காலத்தில் ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் டீசலை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்து மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து டீசல் இறக்குமதி செய்து வந்தது.

தற்போது ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் இருந்து வரும் டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அமெரிக்காவில் விவசாயிகள், லாரி ஓட்டுநர்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் அமெரிக்கா ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்யா உடனடியாக 3 லட்சம் டன் டீசலை அமெரிக்கா மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு விநியோகிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

 US President Trump that put Zelenskyy in a tight spot
ஈரானின் அணுசக்தியை தொடமுடியாத அமெரிக்கா.. தோல்வியடைந்த ட்ரம்ப்.. அடுத்து என்ன?
Reuters

மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரஷ்ய டீசலுக்குக்கான தடை விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு வலுசேர்ந்து ஆயுத பலத்தையும் அதிகரிக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறைக்கு காரணமே உக்ரைன் ரஷ்யாவின் எரிவாயு கிடங்குகளை தாக்குவதுதான் என்றும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார். மேலும், உக்ரைனுக்கு ஒரு புதிய அதிபர் நியமிக்கப்பட வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அமெரிக்காவின் ஆதரவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி முற்றிலும் இழந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. உக்ரைன் - அமெரிக்காவுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் ரஷ்யாவுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.

 US President Trump that put Zelenskyy in a tight spot
நடுவானில் தீப்பிடித்து எரிந்த இந்திய விமானம்: அலறிய 174 பயணிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ !
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com