\
Mojtaba & Trump
Mojtaba & Trump ANI

ஈரானின் அணுசக்தியை தொடமுடியாத அமெரிக்கா.. தோல்வியடைந்த ட்ரம்ப்.. அடுத்து என்ன?

ஈரானின் அணுசக்தியை அழிப்பது அவ்வளவு எளிதல்ல! டிரம்ப்புக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கை!
Published on: 
Summary

அமெரிக்காவின் தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டாலும், முழுமையாக அழிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எந்த மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம் என்று ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் அமெரிக்கா மீண்டும் தாக்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

செய்தியாளர் - M. மீரா

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்க அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், எந்த மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் முன்பைவிடக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

ஈரானின் அணு ஆயுத முயற்சியைத் தடுக்க, அவர்கள் தங்களின் யுரேனியம் செறிவூட்டும் திறனைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Trump & JD vance
Trump & JD vance reuters

பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலைக்கு மிக நெருக்கமாக (60% தூய்மையான யுரேனியம் செறிவூட்டல்) சென்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி ஈரான் மீது தாக்குதலை நடத்தின .

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானின் ஏவுகணை தளங்கள், நிலத்தடி சேமிப்புக் கிடங்குகள் மற்றும் அணுசக்தி நிலையங்களின் நுழைவாயில்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தன.

Uranium enrichment plant at Isfahan
Uranium enrichment plant at Isfahanreuters

இந்தத் தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் அணு ஆயுத ஆராய்ச்சி மையங்களுக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டதாக அமெரிக்கா கூறினாலும், ஈரானின் அணுசக்தி திறனை அவர்களால் முழுமையாக அழிக்க முடியவில்லை. அணுசக்தி நிலையங்களின் பெரும்பாலான நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இன்னும் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஈரானின் அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மீண்டும் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருவதாக பென்டகன் வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது இஸ்லாமி, தங்கள் நாட்டின் அணுசக்தித் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளின் மிரட்டல்களால் அழிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். ஈரான் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இந்தத் தொழில்நுட்பம் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Mohammad Eslami
Mohammad EslamiReuters

தங்களிடம் போதுமான ஆயுதங்களும் ராணுவ உபகரணங்களும் இருப்பதாகவும், எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் அவர்.

மேலும், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் திறன்களை மேம்படுத்தி வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. எதிரிகளின் பலவீனங்களை ஆராய்ந்து, தனது ராணுவ உத்திகளையும் மாற்றியுள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது.

Mojtaba & Trump
2100-ல் உலகமே அழியும்... அச்சுறுத்தும் 17 பேராபத்துகள்! விஞ்ஞானிகள் விடுத்த பகீர் எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com