\
us jet
us jetx

அமெரிக்காவுக்கு செக் வைத்த ஈரான்.. பிடிபட்ட அமெரிக்க விமானி!

ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்தின் விமானி ஈரான் ராணுவத்தின் கையில் சிக்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Published on

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் போராக பரிமாணம் அடைந்துள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக நடந்துவரும் இந்த போரில் ஈரானில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஈரான் இதற்கு பணிந்து விடாமல் இஸ்ரேல், அமெரிக்க படைகளுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த போரில் ஈரான் வான்பரப்பில் அமெரிக்காவின் F-15E போர் விமானம் ஈரானின் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதில் இருந்த இரண்டு பணியாளர்கள் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேறினர்.

Fighter Jet’s Seat
Fighter Jet’s SeatTasnim News

வெளியேறியதில் ஒருவர் அமெரிக்க படையால் வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரை மீட்க அமெரிக்க படைகள் பெரிய அளவில் முயற்சி எடுத்து வருகின்றனர். இதனிடையே தப்பித்திருக்கும் அமெரிக்க விமானியைக் கண்டுபிடித்துத் தரும் அல்லது பிடித்துத் தரும் பொதுமக்களுக்கு பெரிய அளவிலான வெகுமதி வழங்கப்படும் என்று ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.

us jet
தீவிரமடையும் போர் ? கெடு விதித்தால் நரகத்தின் வாயில்கள் திறக்கும் - ஈரான் எச்சரிக்கை!

இதனிடையே அமெரிக்க ராணுவம் தனது பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ஈரானின் தென்மேற்குப் பகுதிகளில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் அரசுக்குச் சொந்தமான தஸ்நிம் (Tasnim) செய்தி நிறுவனம், அமெரிக்க விமானி ஒருவர் ஏற்கனவே ஈரானியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

F35
F35 file photo

அமெரிக்க விமானி ஈரானின் கைகளில் சிக்கினால் அது அமெரிக்காவுக்கு பெரிய அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இவர்களை பிணைய கைதிகளாக வைத்து அதன் மூலம் அமெரிக்காவை பணிய வைக்கும் சூழல் ஏற்படும் என அமெரிக்க நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

us jet
அமெரிக்காவை கதறவிடும் ஈரான்.. ஒரே மாதத்தில் 7 விமானங்கள் காலி.. வெளிவந்த அதிர்ச்சி REPORT!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com