அமெரிக்காவை கதறவிடும் ஈரான்.. ஒரே மாதத்தில் 7 விமானங்கள் காலி.. வெளிவந்த அதிர்ச்சி REPORT!
ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமாவதுடன், அமெரிக்க ஆதரவுடன் நடக்கும் தாக்குதல்களில் ஈரானின் நகரங்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டாலும், CNN வெளியிட்ட தகவலின்படி ஈரானின் எதிர்தாக்குதலில் அமெரிக்காவின் ஏழு உயர்தர ராணுவ விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. குவைத் வான்பரப்பில் தவறுதலாக மூன்று F-15, ஈராக்கில் KC-135 விபத்து, சவுதியில் E-3 Sentry அழிவு, ஈரான் எல்லையில் F-15E, ஹார்முஸ் அருகே A-10 வீழ்ச்சி ஆகியவை அமெரிக்காவுக்கு பெரிய பின்னடைவு என மதிப்பிடப்படுகிறது.
செய்தியார் - பிரவீண் ஜோஷ்வா
அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேல் ஈரான் மீது 1 மாதத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரில் ஈரானின் முக்கிய நகரங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் ஏராளமான போர் விமானங்கள், கப்பல்களை நொறுக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால் ஈரானின் தாக்குதலில் பல ஆயிரம் கோடி மதிப்புடைய அமெரிக்காவின் 7 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பிரபல CNN நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், போர் தொடங்கிய சில நாட்களிலேயே, குவைத் வான்பரப்பில் தவறுதலாக குவைத் நாட்டு வான் பாதுகாப்புப் படையினரால் மூன்று F-15 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மார்ச் 12-ம் தேதி ஈராக்கில் நடந்த விபத்தில் KC-135 எரிபொருள் டேங்கர் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர் என்றும், மார்ச் 27-ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் E-3 Sentry என்ற அதிநவீன உளவு விமானம் அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 3-ம் தேதி, F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானம் ஈரானிய வான் எல்லைக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒரு விமானி மீட்கப்பட்டதாகவும், மற்றொருவர் இன்னும் மாயமாக உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல ஏப்ரல் 3-ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே நடந்த மற்றொரு சண்டையில் A-10 என்ற அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதாகவும் இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பல ஆயிரம் கோடி மதிப்புடைய இந்த விமானங்கள் ஈரானிய தாக்குதலில் வீழ்த்தப்பட்டுள்ளது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவு என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

