காலநிலை மாநாட்டைப் புறக்கணித்த அமெரிக்கா.. உலக நாடுகள் அதிர்ச்சி!
துருக்கியில் நடைபெற்ற ஐநா காலநிலை மாநாட்டில், உலக நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை விவாதிக்கின்றன. ஆனால், முக்கிய நாடான அமெரிக்காவின் புறக்கணிப்பு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கவும், முந்தைய வாக்குறுதிகளை செயல்படுத்தவும் மாநாடு முக்கியத்துவம் அளிக்கிறது.
சிஓபி 31 என்ற பெயரில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தொடங்கியுள்ளது. இம்மாநாட்டின் இலக்குகள் குறித்து பார்ப்போம்...
காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கான தீர்வுகளைக் கண்டறிய துருக்கியில் ஐநா காலநிலை மாற்ற மாநாடு தொடங்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பது, முந்தைய வாக்குறுதிகளைச் செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகின்றன. ஆனால், முக்கிய நாடான அமெரிக்கா இந்த மாநாட்டைப் புறக்கணித்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
காலநிலை மாற்ற அபாயங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதற்கு தீர்வு காண்பது தொடர்பான சர்வதேச மாநாடு துருக்கியின் அன்டல்யா நகரில் தொடங்கியுள்ளது. உலகெங்கும் ஏற்பட்ட கொடிய வெப்ப அலைகள், நேபாள பெரு வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு காரணமான காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை உலகத் தலைவர்கள், உலக நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேற்கொள்கின்றனர்.
வரும் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள ஏழை நாடுகளுக்கு உதவுவது மற்றும் பெட்ரோலிய எரிபொருட்கள் பயன்பாட்டை குறைப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
பசுமைக்குடில் வாயு உமிழ்வைக் குறைக்கும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெறப்படும் மின்சார பயன்பாட்டை 21 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக 2035ஆம் ஆண்டிற்குள் உயர்த்துவது குறித்தும் பேசப்பட உள்ளது. காலநிலை மாற்ற பாதிப்புகளை கட்டுப்படுத்த புதிய இலக்குகளை நிர்ணயிப்பதை விட, முந்தைய வாக்குறுதிகளைச் செயலாக மாற்றுவதில் இந்த மாநாடு கவனம் செலுத்த வேண்டும் என மாநாட்டின் தலைவரும் துருக்கி அமைச்சருமான முரத் குரும் கூறியுள்ளார். உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மாசை ஏற்படுத்தும் அமெரிக்கா இம்மாநாட்டைப் புறக்கணித்துள்ளது

