கிரிக்கெட்டில் மட்டும் ஆஸ்திரேலியா கில்லி இல்லை! 41 தொழிலாளர்களை மீட்ட நிஜ ஹீரோ 'அர்னால்டு டிக்ஸ்'!

அர்னால்டு டிக்ஸையும் இந்திய தேசம் சாதனை நாயகனாக கொண்டாடுகிறது. இந்த நேரத்தில் அர்னால்டு டிக்ஸ் யார் என்பதை பார்க்கலாம்.
அர்னால்டு டிக்ஸ்
அர்னால்டு டிக்ஸ்file image

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு, ராணுவ வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் என்று பலர் நாயகர்களாக போற்றப்படும் நிலையில், அர்னால்டு டிக்ஸையும் இந்திய தேசம் சாதனை நாயகனாக கொண்டாடுகிறது. இந்த நேரத்தில் அர்னால்டு டிக்ஸ் யார் என்பதை பார்க்கலாம்.

சில்க்யாரா சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் 17 நாட்களாக சிக்கித்தவித்து வந்த நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வருகை தந்தார் அர்லாண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், சுரங்கப்பாதைகள் மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். நிலத்தடி கட்டுமானங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வரும் இவர், பொறியாளர், புவியலாளர் மற்றும் பேராசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்டவராக மிளிர்கிறார்.

அர்னால்டு டிக்ஸ்
“விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்.. விரைவில் வீடு திரும்புவார்; வதந்திகளை நம்ப வேண்டாம்” - பிரேமலதா

கட்டுமான விபத்துகள், அதில் இருந்து மீள்வது உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் இவர், சர்வதேச அளவில் நடக்கும் பெரிய விபத்துக்களில் இருந்து மீள ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்ட எலிவளை தொழிலாளர்களின் சுரங்கம் தோண்டும் முறை கூட அர்னால்டு டிக்ஸ் கொடுத்த ஐடியா தான். பெரும் விபத்துக்களின்போது நேரடியாக சென்று ஆலோசனை வழங்கும் இவருக்கு கடந்த 2011ம் ஆண்டே விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

இந்த மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்ட எலிவளை தொழிலாளர்களின் சுரங்கம் தோண்டும் முறை கூட அர்னால்டு டிக்ஸ் கொடுத்த ஐடியா தான்.

பல நாட்டு அரசுகளும், தங்களது நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து டிக்ஸை உரையாற்ற வைத்துள்ளனர். இந்த சுரங்க மீட்பு பணியில் கொடுத்த சாப்பாட்டையும், இடத்தையும் பயன்படுத்தி தொழிலாளர்களை மீட்க ஆலோசனை வழங்கிய இவருக்கு நாட்டு மக்கள் அனைவரும் நன்றி கூறி வருகின்றனர். கடுமையான சூழலிலும் நிதானம் இழக்காது, அமைதியாக நின்று ஆலோசனை வழங்கி தொழிலாளர்களை மீட்ட அர்னால்டு டிக்ஸ் நிஜமான ஹீரோ என்று நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர். “நீங்க நல் லா இருக்கணும்..” என்றும் வாழ்த்தி வருகின்றனர்.

“நீங்க நல் லா இருக்கணும்..”
அர்னால்டு டிக்ஸ்
’மீண்டு வாருங்கள் கேப்டன்’ - உடல்நிலை சீராக இல்லை; விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சை!

“கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. ஆல் ஏரியாவுலயும் கில்லி”

மீட்பு பணிக்கு பிறகு பேட்டி கொடுத்த அவர், “இந்த பணிக்காக என்னை அனுப்பி வைத்து, கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், மற்ற விஷயங்களிலும் நாங்கள் சிறந்தவர்கள் என்று காட்ட வாய்ப்பளித்த ஆஸ்திரேலிய பிரதமருக்கு நன்றி. மீட்புப்பணியிலும் நாங்கள் கில்லாடிதான். சிக்கியிருந்த 41 பேரும் இப்போது நலமாக உள்ளனர். எல்லாம் நலமாக உள்ளது. தெளிவான சிந்தனையில் எல்லாமே சாத்தியம்தான்” என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிவாகை சூடிய நிலையில், அர்னால்டு டிக்ஸின் பேட்டி பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள், நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியர்கள் கொடுத்த ஒரே நல்ல செய்தி இதுதான் என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com