டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்pt web

பாக். உடன் நெருக்கம் காட்டும் ட்ரம்ப்.. காரணங்களை புட்டுபுட்டு வைத்த பென்டகன் முன்னாள் உயரதிகாரி!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு நெருக்கடிகளை அளிப்பதுடன் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதன் பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் முன்னாள் உயரதிகாரி மைக்கேல் ருபின்.
Published on

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு நெருக்கடிகளை அளிப்பதுடன் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதன் பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் முன்னாள் உயரதிகாரி மைக்கேல் ருபின்.

donald trump tells do not to hire indians
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

25... 50... என ஏலம் விடுவது போல இந்தியாவுக்கு வரிகளை அதிகரித்துள்ளார் ட்ரம்ப். உலகிலேயே ட்ரம்ப் அதிக வரி விதித்த 2 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், இந்தியாவுக்கு ட்ரம்ப் கூடுதலாக 25% வரி விதித்ததை பல அமெரிக்கர்கள் விரும்பவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. DEMOCRACY INSTITUTE என்ற அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 53% பேர் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 47% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிபருக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் முடிவுகள் வந்துள்ளது ஆச்சரியம் தருவதாக அந்த அமைப்பின் இயக்குநர் PATRICK BASHAM தெரிவித்துள்ளார். உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் ஆதிக்கம் பெருகுவதை 64% பேர் வரவேற்றுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது

ஆனால், அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர் இந்தியாவிற்கு ஆதரவளித்தாலும் அந்நாட்டின் அரசு பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுகிறது. மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். இது அமெரிக்காவின் போக்கில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றமாக உள்ளது. ட்ரம்ப்பின் இந்த போக்கை கடுமையாக சாடியுள்ளார் பென்டகன் முன்னாள் உயரதிகாரி மைக்கேல் ருபின்.

அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர் இந்தியாவிற்கு ஆதரவளித்தாலும் அந்நாட்டின் அரசு பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுகிறது.
டொனால்ட் ட்ரம்ப்
பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு.. அமெரிக்கா அதிரடி!

ட்ரம்ப் உண்மையில் ஒரு வியாபாரி, ரியல் எஸ்டேட் தரகர். குதிரைபேரத்தில் ஈடுபடுகிறார். அவரது செயல்பாடுகளில் ஒழுக்கம் எதுவும் இருக்காது. கொள்கை என்பதெல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது என சாடுகிறார் ருபின். இந்தியா மீதான அவரது நடவடிக்கைகளுக்கு தங்கள் நாட்டின் வணிக நலன், பிரிக்ஸ் அமைப்பின் மீதான கோபம் மட்டுமே காரணம் அல்ல என்றும் கூறுகிறார். எப்பாடுபட்டாவது நோபல் பரிசை வெல்லவேண்டும் என்பதே ட்ரம்ப்பின் பெருவிருப்பம் என்றும், தான் ஒபாமாவை விட, ஜிம்மி கார்ட்டரை விட, கிளின்டனை விட மேலானவன் என உலகிற்கு காட்ட அவர் விரும்புவதாகவும் கூறியுள்ளார் ருபின்.

Michael Rubin
Michael Rubin

ஆனால் பாகிஸ்தானுடனான போர் நிறுத்த விவகாரத்தில் தனது தலையீட்டுக்கு இந்தியா பிடி கொடுக்காதது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது என்கிறார் ருபின். இதற்கான விலையைத்தான் இந்தியா தர நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் பிரச்சினையை தீர்க்க ட்ரம்ப் விரும்பினாலும் இவ்விவகாரத்தில் அவரது பார்வையே தவறாக உள்ளதாகவும் கூறுகிறார் ருபின். பாகிஸ்தானுடனும் ஆசிம் முனிருனுடனும் எவ்வளவு நெருக்கம் காட்டினாலும் அவர்கள் சித்தாந்தங்களை மாற்றவே முடியாது என்றும் ருபின் கூறுகிறார். ஆசிம் முனிர், சீருடையில் உள்ள ஒசாமா பின் லேடன் என்றும் சாடியுள்ளார் ருபின். பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு என்று கூறியுள்ள ருபின், முனிரின் அணுஆயுத பயன்பாடு குறித்த பேச்சை அமெரிக்கா கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்
நெல்லை பல்கலை. | ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்தது ஏன்? மாணவி விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com