\
Trump Shares Map Renaming Strait of Hormuz ‘Trump Strait’
ANIX

இனி ஹார்முஸ் கிடையாது!! நீரிணைக்கே பெயரை மாற்றிய ட்ரம்ப்.. வைரலாகும் பதிவு!!

ஏழு மாதங்களாக நீடித்து வரும் ஈரான்–அமெரிக்கா போருக்கு மத்தியில், உலகின் முக்கிய எண்ணெய் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை “Trump Strait” என மாற்றும் வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on: 

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இப்போரின் ஒரு பகுதியாக, உலகின் முக்கிய எண்ணெய் வழிப்பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் முடங்கியுள்ளது. போர் நிறுத்தத்திற்கான பலகட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியையே தழுவி இருக்கின்றன.

இதற்கிடையில் தான், இந்தப் போரையொட்டி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிடும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம், ஹார்முஸ் நீரிணையை “New U.S. Territory”, அதாவது “புதிய அமெரிக்கப் பகுதி” எனக் குறிப்பிடும் வரைபடத்தை ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் (Truth Social) பக்கத்தில் வெளியிட்டார். அந்த வரைபடத்தில் அமெரிக்கக் கொடியின் வடிவமைப்பும் இடம்பெற்றிருந்தது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவுX

இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி, “ஹார்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதன் பெயரை ட்ரம்ப் நீரிணை (Trump Strait) என மாற்றலாமா?” என ட்ரம்ப் பதிவிட்டார். இந்தச்சூழலில் தான், தற்போது வெளியிட்டிருக்கும் ஒரு சமூக வலைதளப் பதிவில், ஹார்முஸ் நீரிணையின் வரைபடத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஹார்முஸ் நீரிணையின் பெயர் ’ட்ரம்ப்’ நீரிணை எனக் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், இது குறித்து ஈரான் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Trump Shares Map Renaming Strait of Hormuz ‘Trump Strait’
காங்கோவில் விமானம் விபத்து | 2 லெப்டினென்ட் ஜெனரல்கள் உட்பட 14 பேர் பலி!

முன்னதாக, இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகள் கொண்ட ஒரு திட்டத்தை கத்தார் மூலம் அனுப்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்திருந்தார். தேவையான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால், 7 நாட்களுக்குள் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து, வழக்கமான கடல்வழிப் போக்குவரத்தை அனுமதிக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

ஆனால், ஈரானின் இந்த போர் நிறுத்த முன்மொழிவை டிரம்ப் நிராகரித்ததாக கூறப்படுகிறது. மேலும், நவம்பர் மாத அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என டிரம்ப் தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தச்சூழலில் தான், ஈரான் அமெரிக்கா இடையேயான போர் மேலும் தீவிரமடையலாம் என அஞ்சப்படுகிறது.

Trump Shares Map Renaming Strait of Hormuz ‘Trump Strait’
ஏமன் | தீவிரமடையும் உள்நாட்டுப் போர்.. ஆபத்தில் 22 லட்சம் குழந்தைகள்.. ஐ.நா எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com