\
UNICEF Warns yemen childs
yemen war reuters

ஏமன் | தீவிரமடையும் உள்நாட்டுப் போர்.. ஆபத்தில் 22 லட்சம் குழந்தைகள்.. ஐ.நா எச்சரிக்கை!

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், கடந்த 3 வாரங்களில் மட்டும் இடம்பெயர்ந்த சுமார் 1.3 லட்சம் பேரில் 71,000 பேர் குழந்தைகள் என ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - M. மீரா

பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஏமன் உள்நாட்டுப் போர், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த 3 வாரங்களில் மட்டும் இடம்பெயர்ந்த சுமார் 1.3 லட்சம் பேரில் 71,000 பேர் குழந்தைகள் என ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெறும் வன்முறை காரணமாக மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகவும் UNICEF எச்சரித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய UNICEF-ன் ஏமன் பிரதிநிதி, நாட்டில் வன்முறை அதிகரித்து வருவதால் குழந்தைகளிடையே பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்ந்து மோசமடைந்து வருவதாக தெரிவித்தார்.

ஏமனில் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தென்மேற்குப் பகுதியில் உள்ள Taiz மாகாணத்தில் இருந்தும், அந்தப் பகுதிக்குள்ளே இருந்தும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UNICEF-ன் நடமாடும் மருத்துவக் குழுக்கள், அணுகக்கூடிய பகுதிகளில் கடந்த சில வாரங்களில் சுமார் 2,900 குழந்தைகளை பரிசோதித்துள்ளன. அவர்களில் கால்வாசிக்கும் மேற்பட்டோர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஏமன் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அவர்களில் சுமார் 200 குழந்தைகள் மிகக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது ஊட்டச்சத்து குறைபாட்டின் மிகவும் தீவிரமான நிலையாகும்.

yemen war
yemen war reuters

ஆனால், தங்களால் அணுக முடிந்த பகுதிகளில் கிடைத்த இந்தத் தகவல்கள், ஏமனில் நிலவும் ஒட்டுமொத்த சூழ்நிலையின் ஒரு சிறிய அளவிலான பிரதிபலிப்பு மட்டுமே என UNICEF தெரிவித்துள்ளது.

UNICEF Warns yemen childs
அமெரிக்காவின் அடிமடியில் கைவைத்த ஹவுதி.. ஈரான் போருடன் இணையும் ஏமன் போர்.. அதிர்ச்சியில் சவுதி!

இந்த ஆண்டு ஏமனில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 22 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் மிகக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரால் குழந்தைகளின் உயிருக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது. செப்டம்பர் தொடக்கம் முதல் மோதல்களில் குறைந்தது 15 குழந்தைகள் கொல்லப்பட்டும், 14 குழந்தைகள் காயமடைந்தும் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது. மேலும், 3 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

yemen war
yemen war reuters

மோதல் பசியை உருவாக்குகிறது; பசி குழந்தைகளை மேலும் மோதலுக்கு ஆளாக்கக்கூடியவர்களாக மாற்றுகிறது என ஐ.நா தெரிவித்துள்ளது.

போர் காரணமாக ஏமனில் கல்வி அமைப்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 243 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன அல்லது வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1.4 லட்சம் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

UNICEF Warns yemen childs
ஏமன் ராணுவத்தின் மீது தாக்குதல்.. குறைந்தது 30 பேர் பலி.. மீண்டும் ஆரம்பமாகும் உள்நாட்டுப் போர்.?

இதனிடையே, தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி அலைந்து வருகின்றனர். செங்கடல் வழியாக ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள்.

குழந்தைகள் எதிர்கொள்ளவே கூடாத சூழ்நிலைகள் தொடர்ந்து நடந்தவாறு இருந்து வருகிறது எனக் கூறியிருக்கிறது UNICEF. குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மதிக்கவும், நிவாரண உதவிகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் சென்றடைவதை உறுதி செய்யவும் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது.

UNICEF Warns yemen childs
ஹார்முஸ் முதல் அமெரிக்கா வரை.. ஒரேநாளில் ரத்தான பல விமானங்கள்.. மிரட்டிய ஈரான்.. பின்னணி என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com