\
Trump Plans Pakistan Transit Hub for Deporting Migrants
அமெரிக்கா - பாகிஸ்தான்Reuters

அகதிகளை நாடு கடத்த புதிய வழி.. ட்ரம்பின் ரகசியத் திட்டம்! ஒத்துழைக்குமா பாகிஸ்தான்?

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட வேண்டியவர்களை முதலில் விமானம் மூலம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து ஈரான் அல்லது ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
Published on: 

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2வது முறையாகப் பதவியேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, குடியேற்றக் கொள்கைகளை மேலும் கடுமையாக்கி, ஆவணங்களின்றி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரை அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் அமெரிக்காவுக்குச் சுமுகமான தூதரக உறவுகள் இல்லாததால், அந்நாடுகளைச் சேர்ந்த குடியேறிகளை நேரடியாகத் திருப்பி அனுப்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக, பாகிஸ்தானை இடைநிலைப் போக்குவரத்து மையமாகப் பயன்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Reuters

அதாவது, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட வேண்டியவர்களை முதலில் விமானம் மூலம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து ஈரான் அல்லது ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 10-ஆம் தேதி அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மேசா நகரிலிருந்து 9 ஈரானியர்களுடன் புறப்பட்ட விமானம், சுமார் 30 நிமிடங்களிலேயே மீண்டும் அதே விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் அந்தப் பயணிகளைத் தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததுதான் எனக் கூறப்படுகிறது. இதேபோல், இதற்கு முன்னதாக நவம்பர் 8-ஆம் தேதியும் 8 ஈரானியர்களை நாடு கடத்துவதற்காகத் திட்டமிடப்பட்ட விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Trump Plans Pakistan Transit Hub for Deporting Migrants
வேகமெடுக்கும் Nvidia விவகாரம்.. சதி செய்ததா அமெரிக்கா? சீனா சொல்வது என்ன?

மறுபுறம், சுமார் 150 முதல் 200 ஆப்கானியர்களைப் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும் திட்டத்திற்கும் அமெரிக்க நீதிமன்றம் நவம்பர் 3-ஆம் தேதி தற்காலிகத் தடை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்க ராணுவத்திற்குத் துணையாகச் செயல்பட்ட ஆப்கானியர்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் துன்புறுத்தலுக்கும் உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாக நேரிடும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

Reuters

இதற்கிடையே, அமெரிக்காவின் இந்தத் திட்டம் குறித்து பாகிஸ்தான் அரசு இதுவரை எந்தவொரு இறுதி ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஆபத்தான சூழலை எதிர்கொள்ளக்கூடிய அகதிகளை அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதற்குப் பாகிஸ்தானை இடைநிலை மையமாகப் பயன்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்தத் திட்டத்திற்கு பாகிஸ்தான் இறுதியில் ஒத்துழைக்குமா? அல்லது சர்வதேச எதிர்ப்புகளும் சட்டச் சிக்கல்களும் இந்த முயற்சிக்குத் தடையாக அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Trump Plans Pakistan Transit Hub for Deporting Migrants
ரீல்ஸ் வெறியால் பறிபோன உயிர் : பணியாளரை கொடூரமாக தாக்கிய புலி.. உண்மையை மறைக்க நடந்த நாடகம்!