\
Beijing Alleges US is targeting China through Nvidia
model imagegoogel gemeni

வேகமெடுக்கும் Nvidia விவகாரம்.. சதி செய்ததா அமெரிக்கா? சீனா சொல்வது என்ன?

சீன உளவுத்துறை நடவடிக்கை ஒன்றில் ஜென்சன் ஹுவாங் குறிவைக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து சீனாவின் இந்தக் கருத்து வந்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள உளவு குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி, அமெரிக்கா சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுக்க முயற்சிப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே நீடித்து வரும் சிப் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் போட்டியில் இந்த விவகாரம் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jensen Huang
Jensen HuangPTI

நவம்பர் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், அமெரிக்கா பொய்யான உளவுக் கதைகளை உருவாக்கி சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தடைகளை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

சீன உளவுத்துறை நடவடிக்கை ஒன்றில் ஜென்சன் ஹுவாங் குறிவைக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து சீனாவின் இந்தக் கருத்து வந்துள்ளது. ஆலிஸ் ஹுவாங் என்ற சீனத் தொழிலதிபருக்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த உளவு விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

இந்தச் சூழலில், நவம்பர் மாதம் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பில் வர்த்தகம், AI தொழில்நுட்பம் மற்றும் சிப் ஏற்றுமதி தொடர்பான விவகாரங்கள் முக்கிய இடம் பெறலாம் எனக் கருதப்படுகிறது.

Beijing Alleges US is targeting China through Nvidia
ட்ரம்ப் தந்த அழுத்தம்..? நெருக்கடி கொடுத்த அர்ஜென்டினா.. பதுங்கிப் பாய்ந்த ஈரான்!