Trump and Putin ally victor orban loses hungary polls after 16 years
விக்டர் ஓர்பன்ராய்ட்டர்ஸ்

ட்ரம்ப், புடினின் நெருங்கிய நண்பர்.. ஆட்சியை இழந்த ஹங்கேரி பிரதமர்.. 16 ஆண்டுகளுக்குப் பின் தோல்வி!

ஹங்கேரியில் எதிர்க்கட்சியான டிஸ்ஸா கட்சியின் தலைவர் பீட்டர் மாக்யார் வெற்றிபெற்றுள்ளார். இதையடுத்து அவர், விரைவில் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
Published on
Summary

ஹங்கேரியின் பிரதமராக பீட்டர் மாக்யார் விரைவில் பதவியேற்க உள்ளார். மாக்யாரின் டிஸ்ஸா கட்சி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, ஓர்பனின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தவிர, இந்த முடிவு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும், ரஷ்ய அதிபர் புடினுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் விக்டர் ஓர்பனின் முன்னாள் கூட்டாளியும், எதிர்க்கட்சியான டிஸ்ஸா கட்சியின் தலைவருமான பீட்டர் மாக்யார் வெற்றிபெற்றார். 199 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் டிஸ்ஸா கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனது தோல்வியை விக்டர் ஓர்பன் ஒப்புக்கொண்டுள்ளார்.

Trump and Putin ally victor orban loses hungary polls after 16 years
ட்ரம்ப், புடின்எக்ஸ் தளம்

இதையடுத்து, ஹங்கேரியின் பிரதமராக பீட்டர் மாக்யார் விரைவில் பதவியேற்க உள்ளார். மாக்யாரின் டிஸ்ஸா கட்சி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, ஓர்பனின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தவிர, இந்த முடிவு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும், ரஷ்ய அதிபர் புடினுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. காரணம், அவர்கள் இருவரின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருப்பவர், விக்டர் ஓர்மன். பொருளாதார மந்தநிலை, அதிகரித்த செலவினங்கள், சிறுபான்மையினர் உரிமைகள், ஊடகச் சுதந்திர மீது கடுமையான அடக்குமுறைகள் ஆகியன விக்டர் ஓர்மனின் தோல்விக்குக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

Trump and Putin ally victor orban loses hungary polls after 16 years
எரிபொருளை நிறுத்தும் ஹங்கேரி.. போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு மேலும் பின்னடைவு!

மேலும் தனது ஆட்சியின்போது உள்ள வணிக உயரடுக்கினரின் கருவூலங்களுக்குப் பெரும் தொகையைத் திசை திருப்பியதாகவும் ஓர்மன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். அதேநேரத்தில், ஓர்பனின் தோல்வி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது என்றே கூறப்படுகிறது. ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஹங்கேரியின் விரோதப் போக்கிற்கு ஒரு முடிவு வரும் என்று அது நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்தது.

Trump and Putin ally victor orban loses hungary polls after 16 years
விக்டர் ஓர்பன்ராய்ட்டர்ஸ்

ஓர்பன், ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் வெளிப்படையான எதிர்ப்பாளர்களில் ஒருவராக இருந்தார்; அவர் முக்கிய முடிவுகளில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதுடன், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கான நிதி உதவியையும் எதிர்த்தார். ஓர்பனின் ஆட்சேபனைகள் காரணமாக வாரக்கணக்கில் முடக்கி வைக்கப்பட்டிருந்த, உக்ரைனுக்கான 90 பில்லியன் யூரோ கடனுக்கு, பீட்டர் மாக்யார் தலைமையிலான புதிய தலைமை வழிவகுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் வாக்கெடுப்பில் தலையிடுவதாக ஓர்பன் ஆதாரமின்றி வலியுறுத்தி வந்தார்; இந்தக் குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் நிர்வாகமும் எதிரொலித்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

Trump and Putin ally victor orban loses hungary polls after 16 years
ஹங்கேரி எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு.. அமைதிக்கான பரிசு ட்ரம்புக்கு கிடைக்குமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com