hungary warns will cut natural gas supplies to ukraine
ஜெலன்ஸ்கி, விக்டர் ஆர்பன், புடின்எக்ஸ் தளம்

எரிபொருளை நிறுத்தும் ஹங்கேரி.. போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு மேலும் பின்னடைவு!

ரஷ்யாவில் இருந்து மீண்டும் ஆயில் சப்ளை தமது நாட்டுக்கு வரும்வரை உக்ரைனுக்கான இயற்கை எரிவாயு சப்ளை படிப்படியாக நிறுத்தப்படும் என ஹங்கேரி தெரிவித்துள்ளது.
Published on

ரஷ்யாவில் இருந்து பைப் லைன் மூலம் உக்ரைன் வழியாக ஹங்கேரிக்கு எண்ணெய்க் குழாய் வழியை, ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் ஹங்கேரிக்கு என்ணெய் செல்லும் பாதை தடைப்பட்டு உள்ளது. மேலும், தொழில் நுட்பம் மற்றும் தாக்குதல் நடத்தப்படும் அச்சத்தில் அதனைச் சரி செய்யும் பணியும் தடைப்பட்டுள்ளது. இதற்கு உக்ரைன்தான் காரணம் என ஹங்கேரி குற்றம்சாட்டி வருகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டிருக்கும் போரால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எரிபொருள் விலையை இரண்டு, மூன்று மடங்கு அளவுக்கு உயர்த்தியுள்ளன. மேலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும், அது பாதிக்காத வகையில், மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், இப்போரை நிறுத்த இருதரப்பிலும் முயற்சி மேற்கொண்டாலும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதேநேரத்தில், இரு நாடுகளும் மாறிமாறி எண்ணெய் வளங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

hungary warns will cut natural gas supplies to ukraine
விக்டர் ஆர்பன்எக்ஸ் தளம்

இந்த நிலையில், ரஷ்யாவில் இருந்து மீண்டும் ஆயில் சப்ளை தமது நாட்டுக்கு வரும்வரை உக்ரைனுக்கான இயற்கை எரிவாயு சப்ளை படிப்படியாக நிறுத்தப்படும் என ஹங்கேரி தெரிவித்துள்ளது. இதனால் உக்ரைனில் எரிவாற தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஹங்கேரியின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது.

hungary warns will cut natural gas supplies to ukraine
ட்ரோன்களால் தாக்கும் ஈரான்.. உக்ரைன் உதவியை நாடிய அமெரிக்கா.. கண்டிஷன் போட்ட அதிபர்!

இந்த நிலையில், ரஷ்யாவில் இருந்து பைப் லைன் மூலம் உக்ரைன் வழியாக ஹங்கேரிக்கு எண்ணெய்க் குழாய் வழியை, ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் ஹங்கேரிக்கு என்ணெய் செல்லும் பாதை தடைப்பட்டு உள்ளது. மேலும், தொழில் நுட்பம் மற்றும் தாக்குதல் நடத்தப்படும் அச்சத்தில் அதனைச் சரி செய்யும் பணியும் தடைப்பட்டுள்ளது. இதற்கு உக்ரைன்தான் காரணம் என ஹங்கேரி குற்றம்சாட்டி வருகிறது.

hungary warns will cut natural gas supplies to ukraine
ஜெலன்ஸ்கிஎக்ஸ் தளம்

இந்த நிலையில் உக்ரைனுக்கு வழங்கும் இயற்கை எரிவாயுவை படிப்படியாக தடை செய்வோம் என்று ஹங்கேரி தெரிவித்துள்ளது. ”உக்ரைன் எண்ணெய் வழங்காத வரை, ஹங்கேரியிடமிருந்து அதற்கு எரிவாயு கிடைக்காது” என ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக ஹங்கேரி, அந்த எரிவாயுவைத் தனது சொந்த இருப்புகளை நிரப்பப் பயன்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார். மேலும் அவர், ஹங்கேரி முழுவதும் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்பு தளங்களுக்கு இராணுவப் படைகளை அனுப்பியுள்ளார் ; உக்ரைன் இடையூறுகளைச் செய்யத் திட்டமிடுவதாக அவர் குற்றம் சாட்டினாலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை. அதேபோல், உக்ரைனும் ஹங்கேரியின் குற்றச்சாட்டுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. முன்னதாக, உக்ரைனுக்கான டீசல் ஏற்றுமதியை ஹங்கேரி பிரதமர் நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர், உக்ரைனை ’ஹங்கேரியின் எதிரி’ என்று அழைத்து வருகிறார்.

உக்ரைனின் எரிசக்தி ஆலோசனை நிறுவனமான EXPROவின்படி, உக்ரைன் தனது எரிவாயுத் தேவையின் பெரும்பகுதியை ஹங்கேரி வழியாக இறக்குமதி செய்கிறது; இது கடந்த ஆண்டு மொத்த எரிவாயு இறக்குமதியில் சுமார் 45% ஆகும். ஜனவரி மாதத்தில் அந்த எண்ணிக்கை 38% ஆகக் குறைந்தது.

hungary warns will cut natural gas supplies to ukraine
ரஷ்யா - உக்ரைன் போர் | 107 நாடுகள் ஆதரவு.. ஐ.நா. சபையில் வாக்களிக்காத இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com