Top 10 world news
Top 10 world newsPT

Top10 உலகச் செய்திகள் | இந்திய முட்டைகளுக்கு கத்தார், ஓமன் தடை To புதிய இமெயிலை உருவாக்கும் மஸ்க்!

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
Published on

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில், சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. இந்திய முட்டைகளுக்குத் தடை விதித்த கத்தார், ஓமன்

முட்டையின் எடைக்கு சில வரையறைகளை நிர்ணயம் செய்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கத்தார் தடை விதித்துள்ளது. கத்தாரைத் தொடர்ந்து ஓமனும் தடை விதித்துள்ளது. இதனால் நாமக்கலில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முட்டை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான முட்டைகள் கப்பலில் நடுக்கடலில் இருப்பதாக நாமக்கலைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோ பைடன்
ஜோ பைடன்முகநூல்

2. இந்தியர்களுக்கு உதவும் வகையிலான அமெரிக்க அரசின் நடவடிக்கை

ஜோ பைடன் இன்னும் சில வாரங்களே அமெரிக்க அதிபராக இருக்கப்போகும் நிலையில், அவர் தலைமையிலான அரசு இந்தியர்களுக்கு உதவும் வகையிலான நடவடிக்கையை அறிவித்துள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அமெரிக்காவில் எளிதாக பணி வாய்ப்பு பெறும் வகையில் H1B விசாவிற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. தங்கள் அறிவிப்பு மூலம் திறமை வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு சேர்ப்பதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்ள சிக்கல்கள் நீங்கிவிடும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

3. தன்மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தத் திட்டம்: போப்

மூன்று ஆண்டுகளுக்கு முன் தன்மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். தனது சுயசரிதையில் இதுகுறித்து எழுதியுள்ள அவர், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் பாக்தாத் நகரத்திற்குச் சென்றபோது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக போப் நினைவு கூர்ந்துள்ளார். வெடிகுண்டை உடல் மீது கட்டிக்கொண்டு பெண் ஒருவர் தன்னை கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அதேபோல் வெடிபொருட்களுடன் வேன் ஒன்று தன்னை கொல்ல தயாராக வைக்கப்பட்டிருந்தாகவும் தனது சுயசரிதையில் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

4. ஹிஜாப் சட்டத்தைத் திடீரென நிறுத்திய ஈரான்!

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில், hijab and chastity law எனும் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, பெண்கள் தங்கள் கைகள், கால்கள், முகத்தைத் தவிர உடல் முழுவதும் முழுமையாக மறைக்க வேண்டும் என அந்த சட்டம் வலியுறுத்தியது. இதைத் தவறும் பெண்களுக்கு அபராதம் அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து, ஹிஜாப் தொடர்பான சட்டம் அமலுக்கு வருவதை ஈரான் அரசு திடீரென நிறுத்தியுள்ளது. சட்டத்தில் ஒருசில விவகாரங்கள் தெளிவற்று இருப்பதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.

Top 10 world news
Top10 உலகச் செய்திகள்|’டைம்’ இதழில் முதலிடம் பிடித்த ட்ரம்ப் To இம்ரான் கான் மீது புதிய வழக்கு!

5. மனஅழுத்தத்திற்கும், மாதவிடாய் வலிக்கும் தொடர்பு

மன அழுத்தத்திற்கும், மாதவிடாய் வலிக்கும் தொடர்பு இருப்பது ஆய்வுகள் மூலம் உறுதியாகியுள்ளது. உலகளவில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று மாதவிடாய் கால வலி. இதுதொடர்பாக, 14 லட்சம் ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மாதவிடாய் கால வலிக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மன அழுத்தம் இன்றி உளவியல் ரீதியாக மகிழ்ச்சியாக இருக்கும் பெண்கள், மாதவிடாய் காலத்தையும் மகிழ்ச்சியாகவே கடப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெண்களின் மனநலனே அவர்களின் உடல்நலனிலும் எதிரொலிப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

6. டிக் டாக் நிறுவன சி.இ.ஓ. - ட்ரம்ப் சந்திப்பு

அமெரிக்காவில் விரைவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற சூழல் நிலவும் நிலையில், அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரியை அதிபர் தேர்தலில் வென்றுள்ள ட்ரம்ப் சந்தித்துள்ளார். டிக் டாக் தடை செய்வது தொடர்பான வழக்கு அமெரிக்கா உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டிரம்ப் அதிபராக இருக்கும் போது டிக் டாக் சீனாவுக்கு தரவுகளை பரிமாறுவதாக கூறி அதை தடை செய்ய நினைத்தார். ஆனால் தற்போது டிக் டாக் செயலிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முக்கியக் காரணம் இதற்குத் தடை விதித்தால் ஃபேஸ்புக் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்பதுதான். ட்ரம்பின் தேர்தல் தோல்விக்கு ஃபேஸ்புக் ஒருகாரணம் என்பதால் அவர் தற்போது டிக் டாக் பக்கம் நிற்பதாகப் பார்க்கப்படுகிறது.

டொனால்டு ட்ரம்ப், எலான் மஸ்க்
டொனால்டு ட்ரம்ப், எலான் மஸ்க்எக்ஸ் தளம்

7. G-மெயிலுக்கு மாற்றாக எக்ஸ் மெயிலை கொண்டுவரும் எலான் மஸ்க்

எலான் மஸ்க் G-மெயிலுக்கு மாற்றாக எக்ஸ் மெயிலை கொண்டு வரப்போவதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சிகள், ஏவுகணைகளை ஏவுதல் என மும்முரமாக இருந்த அவர், டெஸ்லா என்ற நிறுவனத்தின் மூலம் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினார். தற்போது G-மெயில் மென்பொருளுக்கு மாற்றாக எக்ஸ் மெயில் மென்பொருளைப் புதிதாக அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக அண்மையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவும் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே அவர் ஐபோனுக்கு மாற்றாக புதிய மொபைலை கொண்டுவரப்போவதாகவும் கூறப்படுகிறது.

Top 10 world news
Top 10 உலகச் செய்திகள் | ‘இந்தியா வரும் இலங்கை அதிபர்’ முதல் ’உக்ரைனுக்கு ட்ரம்ப் எதிர்ப்பு’ வரை

8. குகைக்குள் சிக்கிய இத்தாலி ஆய்வாளர் மீட்பு

இத்தாலியில் உள்ள குகைக்குள் சிக்கிக்கொண்ட ஆய்வாளர் 3 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். 32 வயதான குகை ஆய்வாளரான ஒட்டவியா பியானா என்பவர் கடந்த 15ஆம் தேதி பெர்கமோவில் உள்ள பியூனோ ஃபோண்டெனோ குகைக்குள் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கும் பணியை அல்ஃபைன் மீட்புக்குழுவினர் மேற்கொண்டு வந்தனர். 8 அடி உயரம் கொண்ட குறுகலான சரிவுக்குள் சிக்கிக்கொண்ட ஒட்டவியா பியனாவை 3 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு மீட்புக்குழுவினர் மீட்டனர். எலும்பு முறிவு, உடலில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோன்று 2023ஆம் ஆண்டு குகைக்குள் சிக்கிக் கொண்ட பியானா 40 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.

9. புதிய எல்லை விதிகளை அறிமுகப்படுத்திய கனடா!

கனடா நாட்டுப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் கூறியதை அடுத்து, கனடா புதிய எல்லை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்க எல்லையில் பரந்த அளவிலான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான திட்டங்களை கனடா அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், ஃபெண்டானையில் வர்த்தகத்தை சீர்குலைத்தல், சட்ட அமலாக்கத்திற்கான புதிய கருவிகளை உருவாக்குதல், அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், தகவல்களைப் பகிர்தல் மற்றும் எல்லை தாண்டிய போக்குவரத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை கனடா உள்ளடக்கும் என தெரிகிறது.

சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்எக்ஸ் தளம்

10. சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல்

பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஜூன் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் வில் மோர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் சென்ற ஸ்டார் லைனர் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டது. இதை அடுத்து இருவரும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தெரிவித்தது. ஆனால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து புதிய விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி இருவரையும் அழைத்துவர நாசா திட்டமிட்டது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சுனிதா வில்லியம்ஸ், புச் வில் மோர் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

Top 10 world news
Top10 உலகச் செய்திகள்|போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் பேச விருப்பம்.. இலங்கைக்கு அதிகனமழை எச்சரிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com