Taiwan government decides to kill green  iguanas
பச்சோந்திகளை கொல்ல தைவான் அரசு முடிவுweb

தைவான்: 1.2 லட்சம் பச்சோந்திகளை கொல்ல அரசு முடிவு.. ஒரு பச்சோந்திக்கு ரூ. 1,300? காரணம் இதுதான்!

தைவான் நாட்டில் 1.2 லட்சம் பெரிய வகை பச்சோந்திகளை கொல்ல அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. லட்சக்கணக்கில் பச்சோந்திகளை கொல்லும் முடிவை அரசு எடுத்ததற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என விரிவாக பார்க்கலாம்.
Published on

தைவான் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பெரியவகை பச்சோந்திகள் (green iguanas) இருக்கின்றன. தைவான் நாடானது, உள்நாட்டில் நடக்கும் விவசாயத்தை அதிக அளவில் சார்ந்திருக்கும் ஒரு நாடாக இருந்து வருகிறது.

பச்சோந்தி
பச்சோந்தி

இந்நிலையில், பெரியவகை பச்சோந்திகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் அந்நாட்டின் விவசாயம் பெரிய அளவில் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் அவற்றை கொல்லும் முடிவில் தைவான் அரசு ஈடுபட்டுள்ளது.

Taiwan government decides to kill green  iguanas
இந்தி எதிர்ப்பும்; கலைஞர் வசனத்தில் புகழ்பெற்ற பட டைட்டிலும்.. தீயாய் வைரலாகும் SK25 படத்தின் பெயர்!

கொல்வதற்கு சிறப்பு வேட்டை குழு நியமனம்..

கடந்த ஆண்டு பெரியவகை பச்சோந்திகளை கொல்வதற்காக சிறப்பு வேட்டை குழுவினரை பணியமர்த்தினர். அவர்கள் சுமார் 70000 பெரியவகை பச்சோந்திகளை கொன்றனர். ஒன்றை கொல்வதற்கு தலா 15 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 1300ரூபாய் அவர்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்டது.

பச்சோந்தி
பச்சோந்தி

இந்த ஆண்டு 120,000 பச்சோந்திகளை கொல்ல முடிவெடுக்கப்பட்டு, உள்ளூர்வாசிகள் அதனை கண்டறிய வேட்டைக்குழுவினருக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்தவகை பச்சோந்திகளை கொல்வதற்கு இயற்கையாக அந்நாட்டில் எந்த உயிரினமும் இல்லாதது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு மற்றொரு காரணியாக இருக்கிறது.

Taiwan government decides to kill green  iguanas
”என்னுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து யாராவது ஏமாற்ற நினைத்தால் நம்பாதீர்கள்..” – நடிகர் ராஜ்கிரண்!

இவை மனிதர்களுக்கு ஆபத்தானதா?

இவற்றின் கூர்மையான நகங்கள் மற்றும் பற்களை கொண்டிருந்தாலும் முரட்டுத்தன்மையுடன் இருப்பது கிடையாது. அதனால் மற்ற உயிரினங்களுக்கு அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை. பெரும்பாலும் பழங்கள், இலைகள் மற்றும் செடிகளை உணவாக உட்கொள்ளும்.

ஆண் பச்சோந்திகள் 2 அடி நீளம் வரை வளரும், 20 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் இருக்கும். பெண் பச்சோந்திகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகளை இடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பச்சோந்தி
பச்சோந்தி

வீடுகளில் இவை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனாலும், வீடுகளில் வளர்க்கும்போது ஆரோக்கியமாக இருப்பது அரிதாக இருப்பதால் ஒரு சில ஆண்டுகளில் இறந்து விடுவதாக கூறப்படுகிறது.

தற்போது லட்சணக்கணக்கில் இவற்றை கொல்ல முடிவெடுக்கப்பட்டாலும் கடந்த ஆண்டு போலவே மனிதாபிமான அடிப்படையில் மீன் பிடிக்க பயன்படுத்தும் ஈட்டியை கொண்டு கொல்ல தைவான் அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Taiwan government decides to kill green  iguanas
"எங்கள் புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டது" டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.. மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com