நடிகர் ராஜ் கிரண்
நடிகர் ராஜ் கிரண்web

”என்னுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து யாராவது ஏமாற்ற நினைத்தால் நம்பாதீர்கள்..” – நடிகர் ராஜ்கிரண்!

தன்னிடம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து யாராவது ஏமாற்ற நினைத்தால் கவனமாக இருங்கள் என்று நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை செய்தியை பகிர்ந்துள்ளார்.
Published on

சினிவாவில் வாய்ப்பு வாங்கி தருவதாகவும், படம் தயாரிக்க போகிறேன், இந்த நடிகரை எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி பணம் பறித்துக்கொண்டு பின்பு ஏமாற்றும் வேலை என்பது நடந்துவருவதை நாம் பல்வேறு குற்றச்சம்பவங்களில் பார்த்திருக்கிறோம்.

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளராத காலத்திலேயே இப்படியான மோசடிகள் நடந்துவரும் நிலையில், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட காலகட்டத்தில் நடைபெறும் மோசடிகள் என்பது அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

நடிகர் ராஜ் கிரண்
நடிகர் ராஜ் கிரண்

இந்த சூழலில் தன்னிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டு என்னுடைய உறவினர் என்றோ, என்னை தெரியும் என்றோ யாராவது ஏமாற்ற நினைத்தால் கவனமாக இருங்கள் என்று நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யாராவது ஏமாற்ற நினைத்தால் கவனமாக இருங்கள்..

மோசடி விவகாரம் குறித்து தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நடிகர் ராஜ்கிரண், “நான் ஒரு நடிகன் என்பதால், என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது, சாதாரணமாக நடக்கும் விசயம்.

இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு, என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள்.

 "கனடா செல்வம்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என்னை வைத்து படம் தயாரிப்பதெற்கென்று,  ஒரு சிபாரிசு மூலம் என்னிடம் வந்து பேசி, என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்ற ஒரு நபர், அதன் பிறகு என்னை சந்திக்கவுமில்லை. படம் தயாரிக்கவும் இல்லை. இது நடந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிறது. அதே நபர் சமீபத்தில் தளபதி என்ற ஒரு தயாரிப்பாளர், இயக்குனரிடம், என்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக்காட்டி, தன் பெயரை "ஸ்டார்லின்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, ஏதோ ஒரு வகையில் அந்த தளபதி என்பவரை ஏமாற்ற முயன்றதாக என் காதுக்கு செய்திகள் வருகிறது...

என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது. என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com