அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து
அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்துweb

"எங்கள் புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டது" டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.. மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்துசெய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Published on

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை தனியார் நிறுவனம் வெட்டி எடுக்க ஏலம் விடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இச்சூழலில், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லி சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், மேலூர் பகுதியை சார்ந்த ஏழு பேர் கொண்ட குழுவினர் சந்தித்தனர்.

டங்ஸ்டன் சுரங்கம்
டங்ஸ்டன் சுரங்கம்

இந்த சந்திப்புக்கு பிறகு தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இன்று வெளியாகும் என அண்ணாமலை தெரிவித்தார். டங்ஸ்டன் திட்டம் தங்கள் பகுதியில் வரக்கூடாது என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அறிவித்தனர்.

டங்ஸ்டன் சுரங்கம்
டங்ஸ்டன் சுரங்கம்

இந்த நிலையில் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து
“டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக இன்று மகிழ்ச்சியான செய்தி வெளியாகும்” - அண்ணாமலை

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்துசெய்து அறிவிப்பு..

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு சென்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை 7 பேர் கொண்ட குழு சந்தித்து பேசிய பிறகு, சுரங்கத்திற்கான ஏலம் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியிருக்கும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, ”பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தை பாதுகாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்திருக்கும் அண்ணாமலை, “அரிட்டாபட்டி சுரங்க ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. மதுரை அரிட்டாபட்டி பகுதி மக்கள் இன்று நிம்மதியாக தூங்குவர். டங்ஸ்டன் சுரங்கம் தேவையென்றாலும் விவசாய பகுதி,பல்லுயிர் பெருக்கத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என பேசியுள்ளார்.

ஏலம் ரத்து என்ற அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கும் அரிட்டாபட்டி மக்கள், “டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்துசெய்யப்பட்ட அறிவிப்பின் மூலம் எங்கள் புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டது” என்றும், ”ரொம்ப சந்தோஷமா இருக்கிறோம், பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் என துணை நின்ற அனைவருக்கும் நன்றி” என்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து
டங்ஸ்டன் விவகாரம் : திமுக எதிர்க்கவில்லையா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் Vs துரைமுருகன் பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com