அதிகரித்த கருக்கலைப்புகளால் குறைந்த மக்கள் தொகை; கவலையில் ரஷ்யா! தடுக்க மறைமுக நடவடிக்கைகள் தீவிரம்!

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 7.3 கோடி கருக்கலைப்புகள் நடந்துகொண்டிருப்பதகாவும், இவற்றில் 61 சதவிகித கருக்கலைப்புகள், எதிர்பாராத, தேவையில்லா கருவுறுதல் காரணமாக நேரிடுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
மாதிரிப் படம்
மாதிரிப் படம்ட்விட்டர்

‘‘பாதுகாப்பற்ற கருக்கலைப்பு தாய் மற்றும் சேய் இறப்புக்கும் வழிவகுத்துவிடும். நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக்கிவிடும். இவை தவிர்க்கப்பட வேண்டியவை’’ என்று சொல்லப்படும் நிலையில்தான், உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 7.3 கோடி கருக்கலைப்புகள் நடந்துகொண்டிருப்பதகாவும், இவற்றில் 61 சதவிகித கருக்கலைப்புகள், எதிர்பாராத, தேவையில்லா கருவுறுதல் காரணமாக நேரிடுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் உலகிலேயே அதிகளவில் கருக்கலைப்பு நடக்கும் நாடுகளில் ரஷ்யா (1,000 பெண்களுக்கு 54 பேர் கருக்கலைப்பு) முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்நாட்டில், கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 1990இல் 41 லட்சமாக இருந்ததாகவும், 2021இல் 5.17 லட்சமாகக் குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் போர், நிலையற்ற பொருளாதாரச் சூழல் போன்றவற்றின் காரணமாக மேலும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் ரஷ்ய பெண்களுக்கு ஆர்வம் இல்லாத தற்போதைய சூழ்நிலையில்தான் கருக்கலைப்புக்கு எதிரான சூழல் உருவாக்கப்படுகிறது.

இதையும் படிக்க: உலகின் ஏழை நாடுகள் பட்டியல்: முதலிடத்தில் புருண்டி நாடு.. 2வது இடத்தில் ஆப்கானிஸ்தான்!

இதில் கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் கருக்கலைப்பு சட்டங்கள் எளிதாக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கருக்கலைப்புக்குத் தடை மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும் நாடுகளில் சட்டவிரோதமாக கருக்கலைப்புகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்ட நாடுகளிலும்கூட மருத்துவ வசதிக் குறைவு, விழிப்புணர்வின்மை, வறுமை காரணமாக முறையற்ற பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன.

இத்தகைய உலகளாவிய சூழ்நிலையில்தான் கருக்கலைப்பு விஷயத்தில் பழைய காலத்தை நோக்கி ரஷ்யா திரும்பியுள்ளதாக விமர்சனம் வைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அந்நாட்டில், கருக்கலைப்புக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. ரஷ்யாவில் இப்போதும் கருக்கலைப்பு சட்டப்படியாக, பரவலாகக் கருக்கலைப்பு செய்துகொள்ள முடியும் என்றாலும் அண்மைக்காலமாக பல்வேறு நிலைகளில் கருக்கலைப்புகளைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ரஷ்யா தொடங்கியிருக்கிறது.

இதையும் படிக்க: டி20 உலகக்கோப்பை, ஒருநாள் கோப்பை: ரோகித் - கோலியின் எதிர்காலம்..! என்ன முடிவெடுக்க போகிறது பிசிசிஐ?

இதன்காரணமாக, கருக்கலைப்புக்கான வசதிகள், வாய்ப்புகள் முடக்கப்படுகின்றன. இப்போதே பல இடங்களில் தனியார் மருத்துவமனைகள் கருக்கலைப்புகளை நிறுத்திவிட்டன. விரைவில் நாடு தழுவிய அளவில் தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்புக்குத் தடை விதித்து சட்டம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொடக்க நிலையிலேயே கருவைக் கலைப்பதற்கான கருக்கலைப்பு மாத்திரைகளின் புழக்கத்துக்குக் கடும் கட்டுப்பாடுகளை நலவாழ்வுத் துறை அமைச்சகம் விதித்திருக்கிறது. கருக்கலைப்பு மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட மருந்துகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து, இவற்றுக்கான இருப்பு, பயன்பாட்டுக்கான பதிவுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புதிய கட்டுப்பாடுகளால் கருத்தடை மாத்திரைகளின் விலையும் உயரும் ஆபத்து இருக்கிறது.

மேலும், கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கும் மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் இதற்கான நடைமுறைகளைக் கடுமையாக்கியிருக்கின்றனர். தொடர்ந்து, தேசிய அளவில் கருக்கலைப்புக்கு எதிரான மனநிலையைக் கருவுற்ற பெண்களிடம் உருவாக்குமாறு மருத்துவர்களை நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் புதிய விதிகள் காரணமாக அவசரகால கருத்தடை, கருக்கலைப்பு மருந்துகளுக்குப் பெரும் பற்றாக்குறையும் நேரிடலாம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: ”ஒழுக்கம், கடின உழைப்பு.. அதோடு விஸ்வாசமும் ரொம்ப முக்கியம்”-கேப்டன் பொறுப்பு குறித்து சுப்மன் கில்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com