டி20 உலகக்கோப்பை, ஒருநாள் கோப்பை: ரோகித் - கோலியின் எதிர்காலம்..! என்ன முடிவெடுக்க போகிறது பிசிசிஐ?

கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
virat kohli, rohit sharma
virat kohli, rohit sharmatwitter

ரோகித் மற்றும் கோலியின் எதிர்காலம்

நடப்பு உலகக்கோப்பையில் மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதே, இன்றளவும் அனைவரின் பேச்சாக இருக்கிறது. இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் தோல்வி, அரசியல்ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அடுத்த (2027) உலகக்கோப்பை வரை அவர்கள் விளையாடுவார்களா என்பதே முதல் கேள்வியாக உள்ளது. ஆனால், அதற்குமுன்பு, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் அவர்கள் பங்கேற்பார்களா என்பதே பெருங்கேள்வியாக உள்ளது.

டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா

மேலும் கடந்த சில மாதங்களாகவே சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் மற்றும் விராட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர் முழுவதும் இளம்படைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு, வீரர்களைத் தேர்வுசெய்யும் பணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

இதில் டி20 கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாக, உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். ஆகையால், காயத்திற்குப் பிறகு டி20 உலகக்கோப்பையில் அவரே கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்தச் சூழலில்தான் ரோகித் மற்றும் கோலியின் எதிர்காலம் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: ”உனக்கென்ன வேணும் சொல்லு” நடுவானில் விமானத்தில் மகளின் திருமணத்தை நடத்திய கோடீஸ்வரர்.. வைரல் வீடியோ!

2027 உலகக்கோப்பைக்கான சிறந்த அணியை உருவாக்க வேண்டும்

ரோகித் மற்றும் கோலியின் வயதைக் கருத்தில்கொண்டும், அவர்களின் பேட்டிங் திறனைக் கொண்டும் இந்த விவாதம் வைக்கப்பட்டு வருகிறது. 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு, இப்போதிலிருந்தே வீரர்களைத் தயார் செய்ய வேண்டும். அதற்கான ஒரு சிறந்த அணியையும் கேப்டனையும் தயார் செய்ய வேண்டும். அதை இப்போதிருந்து செய்தால் மட்டுமே உலகக்கோப்பைக்கான சிறந்த அணியை உருவாக்க முடியும்.

இதைவைத்துத்தான் விராட் மற்றும் ரோகித்தின் எதிர்காலம் குறித்து பேசப்படுகிறது. ஏற்கெனவே டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு, சிறப்பான பங்களிப்பை அளித்திருப்பதால், அவரே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக வாய்ப்பிருக்கிறது. அவரது தலைமையில் இளம்வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அத்தொடரில் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய முயற்சி: ஜோடிகளை நிறுத்தி தேர்ந்தெடுக்க களம் அமைத்த தென்கொரியா!

முன்னாள் வீரர்கள் சொல்வது என்ன?

விராட் மற்றும் ரோகித்தின் டி20 தொடர் குறித்து மேற்கு இந்திய அணிகளின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல், ”2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து அவர்களாகவே முடிவு எடுக்க ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் தகுதியானவர்கள். இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரோகித் மற்றும் கோலி தங்களுடைய முடிவினை தாங்களே தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாட விரும்பினால், அதனை அவர்களே அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், ”ரோஹித்தைவிட சிறந்த தொடக்க ஆட்டக்காரர் இந்தியாவில் இல்லை. அவருக்கும் கோலிக்கும் இன்னும் கிரிக்கெட் விளையாட வேண்டிய காலம் இருக்கிறது. எனினும், இந்தியா ஒருகட்டத்திற்கு மேல் அவர்களை விடுவிக்க முடிவெடுத்தால், ரோஹித்தையும் விராட்டையும் மரியாதையுடன் வெளியேற்றுவது ஹர்திக்கின் பொறுப்பு” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ”அமைதியாக இருப்பதே சிறந்த பதில்” - இணையத்தில் வைரலாகும் பும்ரா பதிவு... இதுதான் காரணமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com