”ஒழுக்கம், கடின உழைப்பு.. அதோடு விஸ்வாசமும் ரொம்ப முக்கியம்”-கேப்டன் பொறுப்பு குறித்து சுப்மன் கில்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சுப்மன் கில், கேப்டனாக இருப்பதற்கு அர்ப்பணிப்பும் விஸ்வாசமும் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
Gill - Hardik
Gill - HardikIPL

குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்டியா இந்த மூன்று பெயர்கள் தான் கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காக இருந்து வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு பெரிய வர்த்தகமாக பார்க்கப்படும் ஹர்திக் பாண்டியாவின் டிரேடிங் என்பது ஒரு பெரிய பேசுபொருளாக ஒருவாரம் கடந்தும் இருந்து வருகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது தான் பல கேள்விகளையும், விமர்சனங்களையும் எழவைத்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் மும்பைக்கு செல்லும் முடிவுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியில்லை என்பது புரிகிறது. ஒரு வீரரே தான் செல்கிறேன் என்று கூறும் போது என்ன செய்யமுடியும் என்று பலசாரார் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா டிரேடிங்கும்.. ரசிகர்களின் ஆதங்கமும்..

ஒரு பக்கம் ” ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இந்திய அணியில் கூட நிரந்த இடம் கிடைக்குமா என்ற கேள்வி இருந்த போது, குஜராத் டைட்டன்ஸ் அணியும் நெஹ்ராவும் ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன்சி பொறுப்பை கொடுத்து அவரின் நம்பிக்கையை வளர்த்துவிட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, முதல் சீசனிலேயே GT-ஐ கோப்பைக்கு அழைத்துசென்றார். அதன்பிறகு தான் இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பு தானாக தேடி வந்தது.” அதனால் ஹர்திக் பாண்டியாவின் தற்போதைய நிலைமைக்கு குஜராத் டைட்டன்ஸ் தான் காரணம் என்றும், எப்படி அவர் குஜராத் அணியை விட்டு செல்லமுடியும் என்றும், ஹர்திக் பாண்டியாவின் இந்த செயல் சரியில்லை" என்றும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Hardik Pandya
Hardik PandyaICC

மற்றொரு பக்கம் ” ஹர்திக் பாண்டியாவை ஒரு வீரராகவும், ஆல்ரவுண்டராகவும், ஃபினிசராகவும் அடிப்படையில் வளர்த்து விட்டதே மும்பை இந்தியன்ஸ் அணி தான். அதுதான் அவருடைய ஹோம் அணி.” அதனால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதில் தவறில்லை என்றும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

ஒரு கேப்டனுக்கு விஸ்வாசம் ரொம்ப முக்கியம்! - சுப்மன் கில்

குஜராத் டைட்டன்ஸ் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருக்கும் சுப்மன் கில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்படுவதற்காக நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

வீடியோவில் பேசியிருக்கும் கில், ”ஐபிஎல் தொடங்கிய போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் ஐபிஎல்லில் விளையாட வேண்டும் என்பது ஒரு பெரிய ஆசையாக இருக்கும். அதிலும் தான் வளரும் போது பார்த்து பார்த்து வளர்ந்த ஒரு குழந்தைக்கு, ஒரு ஐபிஎல் அணிக்கு கேப்டனாக வேண்டும் என்பது ஒரு பெரிய கனவு. இது எனக்கு ஒரு பெரிய தருணம், மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

Shubman Gill
Shubman GillFacebook

மேலும் கேப்டன்சி குறித்து பேசியிருக்கும் அவர், “நமக்கு தெரியும் கேப்டன்சி என்பது நிறைய விசயங்களை உள்ளடக்கியது. அவற்றில் அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கடின உழைப்பு போன்ற பலவிசயங்கள் உள்ளன. மேலும் விஸ்வாசமும் அவற்றில் ஒன்று என நினைக்கிறேன். சிறந்த தலைவர்களின் கீழ் நான் விளையாடியிருக்கிறேன், அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். அந்த அனுபவத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட நல்ல விசயங்கள் இந்த ஐபிஎல்லில் எனக்கு நிறைய உதவும் என்று நம்புகிறேன். எங்கள் அணியில் ஏற்கனவே சிறந்த தலைவர்கள் உள்ளனர். அது கேன் வில்லியம்சனாக இருக்கலாம் அல்லது ரஷீத் பாயாக இருக்கலாம். இல்லையா ஷமி, டேவிட் மில்லர், ரித்திமான் சாஹா யாராக இருந்தாலும் சரி, அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள நினைக்கிறேன். நிச்சயமாக, வழியில் நிறைய கற்றல் இருக்கும், அது என்னுடையதாக இருக்கும். நல்ல தருணங்களை உருவாக்குவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்" என்று கில் மேலும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com