புடின் - ட்ரம்ப்
புடின் - ட்ரம்ப்pt web

“2022ல் ட்ரம்ப் அதிபராக இருந்திருந்தால் போரே ஏற்பட்டிருக்காது” - புடின்

2022ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்திருந்தால், உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் ஏற்பட்டிருக்காது என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
Published on

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில், அலாஸ்காவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க, அலாஸ்கா விமான தளத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதலில் வந்தடைந்தார். தொடர்ந்து, அங்கு வந்திறங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, ட்ரம்ப் உற்சாகமாக கைகுலுக்கி வரவேற்றார். தொடர்ந்து, அதிபர் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அமெரிக்க விமானப்படையின் B-2 stealth bombers போர் விமானங்கள் வானில் சாகசம் புரிந்து, இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளித்தன.

தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும், உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

புடின் - ட்ரம்ப்
திராட்சைகளுக்கான 8% வரி நீக்கம்.. இந்தியா இங்கிலாந்து ஒப்பந்தத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்கள் கேள்விகளுக்கு எதுவும் பதிலளிக்காமல், இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விரைவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அழைத்துப் பேச இருப்பதாகவும், இறுதி முடிவு அவர்கள் கையில் தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.

புடின் - ட்ரம்ப்
புடின் - ட்ரம்ப்pt web

பல விஷயங்களில் உடன்பாடு காணப்பட்டதாகவும், ஆனால் முக்கியமான சில விஷயங்கள் எஞ்சியிருப்பதாகவும் அவர் கூறினார். ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புடின் - ட்ரம்ப்
போர் நிறுத்தம் தொடர்பான கேள்வி.. புதின் கொடுத்த ரியாக்சன்

தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வர, தான் உண்மையான ஆர்வத்துடன் இருப்பதாகவும், ஆனால் உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் பேச்சுவார்த்தையை நாசப்படுத்திவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். 2022ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்திருந்தால், உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் ஏற்பட்டிருக்காது எனக்கூறிய புடின், இந்தப் பேச்சுவார்த்தை, தீர்வுக்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பிற்குப் பிறகு, இரு தலைவர்களும் தங்கள் விமானங்களில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போருக்கு தீர்வுகாண அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு, ரஷ்ய அதிபர் புடின் வரவேற்பு தெரிவித்துள்ளது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

புடின் - ட்ரம்ப்
பாஜக 11% வாக்குகளைப் பெற்றது எப்படி? தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கமா? புதிய குற்றச்சாட்டு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com