செய்தியாளர்கள் கேள்விக்கு புதின் கொடுத்த ரியாக்சன்
செய்தியாளர்கள் கேள்விக்கு புதின் கொடுத்த ரியாக்சன்pt web

போர் நிறுத்தம் தொடர்பான கேள்வி.. புதின் கொடுத்த ரியாக்சன்

உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக, புதினுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Published on

அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினுக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் இடையே மூன்று மணி நேரத்தும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவில் பத்திரியாளர்களை சந்தித்து கூட்டாகப் பேசிய ட்ரம்ப், “பல விஷயங்களில் உடன்பாடு காணப்பட்டதாகவும், ஆனால் முக்கியமான சில விஷயங்கள் எஞ்சியிருப்பதாகவும்” கூறினார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு புதின் கொடுத்த ரியாக்சன்
ஸ்விக்கி சேவைக் கட்டணம் உயர்வு.. அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்..!

விரைவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கவுள்ளதாகவும், இறுதி முடிவு அவர்கள் கையில் தான் உள்ளது” என்றும் தெரிவித்தார். அதேபோல ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வர தான் உண்மையான ஆர்வத்துடன் இருப்பதாகவும், ஆனால் உக்ரைனும் ஐரோப்பாவும் பேச்சுவார்த்தையை நாசப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார். மேலும், இந்தப் பேச்சுவார்த்தை, தீர்வுக்கான ஒரு தொடக்கப் புள்ளி என்றும் அடுத்த முறை ட்ரம்பை மாஸ்கோவில் சந்திப்பேன் என்றும் புதின் தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு முன்பு உக்ரைனுடனான போரை எப்போது நிறுத்துவீர்கள் என ஊடகவியலாளர்கள் , புடினிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்க மறுத்த புடின், பல்வேறு விதமான முகபாவனைகளை வெளிபடுத்தினார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

செய்தியாளர்கள் கேள்விக்கு புதின் கொடுத்த ரியாக்சன்
பாஜக 11% வாக்குகளைப் பெற்றது எப்படி? தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கமா? புதிய குற்றச்சாட்டு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com