காலிஸ்தான் தலைவரை கொல்ல சதி: இந்தியா மீது அமெரிக்கா பகீர் குற்றச்சாட்டு-மீண்டும் வம்பிழுக்கும் கனடா?

காலிஸ்தான் தலைவர் கொலை சதி தொடர்பான விவகாரத்தில், இந்தியா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இதுவரை மவுனம் காத்துவந்த கனடாவும் மீண்டும் வாய் திறந்துள்ளது.
குர்பத்வந்த் சிங் பன்னுன்
குர்பத்வந்த் சிங் பன்னுன்ட்விட்டர்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையால் இந்தியா - கனடா உறவில் விரிசல்

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புப் போராடி வருகிறது. கனடாவில் இருந்துகொண்டு, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கும் தொடர்பு உண்டு என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கொளுத்திப் போட்ட விவகாரத்தில் இருநாடுகளுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, இரு தரப்பும் தூதர்கள் வெளியேற்றம் தொடங்கி பல்வேறு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

ஜஸ்டின் ட்ருடோ, மோடி
ஜஸ்டின் ட்ருடோ, மோடி

குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சி: அமெரிக்கா குற்றச்சாட்டு

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற, இந்தியாவால் காலிஸ்தான் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டிருக்கும் குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க மண்ணில் கொலை செய்வதற்காக நடந்த சதியை அந்நாடு முறியடித்து உள்ளதாக தகவல் வெளியானது. இவர், அமெரிக்காவை தளமாக கொண்ட ’நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பன்னுனைக் கொலை செய்ய நடந்த சதியினை அமெரிக்கா முறியடித்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்த சில வாரங்களுக்குப் பின்னர், இந்தியா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

குர்பத்வந்த் சிங் பன்னுன்
காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரம்: கனடா-இந்தியா உறவில் வெடித்த விரிசல்! வரலாறு என்ன சொல்கிறது?

இந்தியா மீது குற்றஞ்சாட்டிய அமெரிக்கா!

அதாவது, அமெரிக்காவில் இருக்கும் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரை கொல்ல சதி செய்ததாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருப்பதுடன் வழக்கும் பதிவும் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகில் குப்தா இந்திய அரசின் ஊழியர் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு, நிகில் குப்தா ஒரு லட்சம் அமெரிக்க டாலரைக், (இந்திய மதிப்பில் 83 லட்ச ரூபாய்) கொடுக்கவும் முன்வந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னுன்
குர்பத்வந்த் சிங் பன்னுன்

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன், ”சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அதுகுறித்து கவலையும் அதிர்ச்சியையும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது, இந்திய அரசின் கொள்கைகள் அல்ல எனவும், இதுகுறித்து இந்திய அரசு முழு அளவில் விசாரணை நடத்தி வருவதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். இதனை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு உள்ளது” எனத் தெரிவித்தார்.

குர்பத்வந்த் சிங் பன்னுன்
”தனிநாடு கோரிக்கை” - சுதந்திர போராட்ட காலம் to கனடா பிரச்னை! காலிஸ்தான் இயக்கம் ஓர் வரலாற்று பார்வை!

அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த இந்தியா

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ”பயங்கரவாதிகளுக்கு மற்றவர்களுடனான தொடர்பு குறித்து அமெரிக்கா வெளியிட்டிருக்கும் தகவல்கள் குறித்து, விசாரித்துவருகிறோம். இந்த விவகாரம் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு நலன்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதால், இது போன்ற செய்திகளை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. எனவே, இது போன்ற சிக்கல்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கெனவே ஆய்வுப்பணிகள் நடந்துவருகின்றன" என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே காலிஸ்தான் பிரச்னையில் இந்திய மற்றும் கனடா உறவு சீர்குலைந்திருக்கும் நிலையில், இந்த விவகாரமும் மீண்டும் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பேசுபொருளானதையடுத்து, காலிஸ்தான் விவகாரத்தில் கடந்த சில நாட்களாய் மவுனம் காத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தற்போது மீண்டும் வாய் திறந்துள்ளார்.

குர்பத்வந்த் சிங் பன்னுன்
கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர்! யார் இந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார்? உலக நாடுகள் என்ன சொல்கிறது?

அமெரிக்கா குற்றச்சாட்டைத் தொடர்ந்து மீண்டும் வாய்திறந்த கனடா

அவர், இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டைக் கையில் எடுத்திருக்கும் ஜஸ்டின் ட்ருடோ, ”அமெரிக்காவில் இருந்துவரும் செய்திகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். நாங்கள் தொடக்கத்தில் இருந்து இதைத்தான் சொல்லி வருகிறோம். இப்போது அமெரிக்காவின் செய்தியும் அதையேதான் காட்டுகிறது. இந்த விவகாரத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.. இந்திய அரசு எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதைக் கண்டறிய உதவ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக, கனடா இந்திய அரசு மீது குற்றஞ்சாட்டி வருகிறது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், ’சதித்திட்டம் குறித்து விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இரண்டு உயர்புலனாய்வு அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது” என தெரிவித்திருப்பதும் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா குற்றஞ்சாட்டும் இந்தியரான நிகில் குப்தா யார்?

நிகில் குப்தா என்பவர் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் என்பதைத் தவிர, அவரைப் பற்றி வேறு எந்தத் தகவலும் தெரியவில்லை. அமெரிக்காவிற்கும் செக் குடியரசிற்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி செக் அதிகாரிகள் குப்தாவை கடந்த ஜூன் 30, 2023 அன்று கைதுசெய்து காவலில் வைத்திருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. அவர்மீது கொலை மற்றும் சதி ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம்.. கபில் தேவ் சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com