இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம்.. கபில் தேவ் சொல்வது என்ன?

”விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பது தேர்வுக் குழுவினரின் பொறுப்பாகும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
கோலி, ரோகித், கபில்
கோலி, ரோகித், கபில்ட்விட்டர்

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியதுடன், கோப்பையையும் தவறவிட்டது. சொந்த மண்ணிலேயே கோப்பை கைவிட்டுப் போனது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதேநேரத்தில் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, முகம்மது ஷமி ஆகியோர் மிகச் சிறப்பாகப் பங்களிப்பைத் தந்திருந்தனர். இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2027 உலகக்கோப்பையில் விளையாடுவார்களா போன்ற கேள்விகள் வைக்கப்பட்டு வருகின்றன.

காரணம், அவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக டி20 தொடரில் இருந்து முழுவதுமாக ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. தற்போதுகூட, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்கூட அவர்கள் உட்பட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே அவர்கள் இருவரும், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், ’அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும்; அணிக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் இன்னும் சில காலத்துக்குத் தேவை’ என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: வழிகாட்டிய தோழன்! வாரன் பஃபெட்டின் நண்பர் சார்லஸ் முங்கர் மறைவு- 50 ஆண்டு நட்பு சாத்தியமானது எப்படி?

இதுகுறித்தான கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பதிலளித்துள்ளார். அதில் அவர், “அது இந்திய அணி தேர்வு குழு உறுப்பினரின் வேலையாகும். எனவே, இதை நாம் அவர்களிடம் விட்டுவிட வேண்டும். மேலும், அனைத்து அம்சங்களிலும் நாம் கருத்துகளைச் சொல்வது நல்லதல்ல.

ஆனால் இதுபற்றி முடிவெடுப்பது தேர்வுக் குழுவினரின் பொறுப்பாகும். ஒருவேளை, அவர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உலகக்கோப்பை விளையாடுவதற்குச் சரியானவர்கள் என்று கருதினால் கண்டிப்பாக தேர்வு செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் அமீபா; விநோத நோய்க்கு 10 வயது கொலம்பிய சிறுமி பலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com