தண்ணீரில் கை கழுவியவரை கடித்து இழுத்துச் சென்ற சுறா.. பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ!

அமெரிக்காவில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவரின் கையைச் சுறா மீன் கடித்து தண்ணீரில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
fisher man
fisher mantwitter

அமெரிக்கா புளோரிடாவின் எவர்க்லேட்ஸ் தேசிய பூங்காவில் நபர் தனது நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 23) படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது, படகில் இருந்தபடியே குனிந்து தண்ணீரில் கைகளைக் கழுவியுள்ளார். அந்த நேரத்தில் சுறா ஒன்று கைகளைக் கடித்தபடி தண்ணீருக்குள்ளும் அவரை இழுத்துச் சென்றது. உடனடியாகச் சுதாரித்த அவரது நண்பர்கள் அவரைச் சுறாவிடமிருந்து மீட்டனர். சுறாவின் இந்த எதிர்பாராத தாக்குதலில் அந்த நபர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் விமானம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது எந்த நிலையில் இருக்கிறார். அவரது காயம் எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை படகில் இருந்த அவரது நண்பர் மைக்கேல் ரூஸோ என்பவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவர், ’இது தனது பயங்கரமான நாட்களில் ஒன்று’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர், “இப்பகுதியில் சுறா தாக்குதல்கள் அடிக்கடி நடக்கும். எனவே அங்கே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதை நீங்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்களும் உங்கள் கையை இழக்க நேரிடும்" எனப் பதிவிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com