சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுweb

சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்..? மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளதா..? விவரம்!

சென்னையில் வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
Published on
Summary

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் காரணமாக, இந்தியாவில் எல்.பி.ஜி சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 928 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. போர் முடிவுக்கு வந்தால் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், இந்தியச் சமையலறைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன்விளைவாக, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி போர் மேகங்கள் சூழ்வதற்கு முன்பு சென்னையில் 868 ரூபாய் 50 காசுகளாக இருந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை தற்போது 928 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர்
சமையல் எரிவாயு சிலிண்டர்முகநூல்

இதேபோல் 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 115 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆயிரத்து 928 ரூபாய் 50 காசுகளாக இருந்த வணிக சிலிண்டரின் விலை தற்போது இரண்டாயிரத்து 43 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது.

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
இந்தியாவில் எரிபொருள் விலை உயராது.. அச்சம் வேண்டாம்.. காரணம் இதுதான்!

விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் சுமார் 85% அளவை வளைகுடா நாடுகளிடம் இருந்துபெறுகிறது. குறிப்பாக, போர்ச்சூழலால் தற்போது முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகவே இந்த இறக்குமதி நடைபெற்று வந்தது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாலும், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகளாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் விலை
வணிக சிலிண்டர் விலைமுகநூல்

இந்த விலையேற்றம் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் சுமையை ஏற்படுத்துவதோடு, வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா மூன்று நாடுகளிலும் போர் காரணமாக பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், போரை விரைவில் முடிக்க அந்தந்த நாட்டின் நிதியமைச்சகங்கள் எச்சரிக்கை விடுத்துவருகின்றன. இந்தசூழலில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வந்தால் இந்தியாவில் எரிபொருள்களின் விலை விரைவில் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
போர் எதிரொலி.. சென்னையில் சிலிண்டர் விலை உயர்வு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com