“நான் போனால் யார் சிகிச்சை கொடுப்பார்கள்?” காஸாவிலிருந்து பாலஸ்தீன மருத்துவரின் கடைசி வார்த்தைகள்!

வடக்கு காஸா பகுதியில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஒருவர் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடைசியாக செய்தி நிறுவனத்திற்கு அவர் கொடுத்த பேட்டி கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.
மருத்துவர் ஹம்மம் அல்லோஹ்
மருத்துவர் ஹம்மம் அல்லோஹ்file image

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய மோதல் இன்றுவரை நீடித்து வருகிறது. இதில், காஸாவின் வடக்குப்பகுதி மொத்தமாக சூரையாடப்பட்டுள்ளது. பள்ளிகள் தொடங்கி மருத்துவமனைகள் வரை அனைத்து பகுதிகளிலும் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல்.

இதனால், பாதுகாப்புக்காக தெற்கு காஸாவுக்கு மக்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டாலும், குறைந்தது 10 ஆயிரம் பேராவது இன்னமும் வடக்கு காஸாவில் இருப்பதாக தெரிகிறது. தாக்குதலில் சிக்கி காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர். அப்படி வடக்கு காஸாவில் தனது குடும்பத்தோடு தங்கியிருந்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஹம்மம் அல்லோஹ் என்பவரும் இஸ்ரேலின் தாக்குதலில் சிக்கி தற்போது உயிரிழந்துள்ளார்.

மருத்துவர் ஹம்மம் அல்லோஹ்
மாஸ் காட்டி மாட்டிய இளைஞர்கள்.. 14 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.. ரத்தாகும் லைசன்ஸ்!

முன்னதாக ஊடகம் ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டி தற்போது வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், “இப்போது நான் இங்கிருந்து சென்றுவிட்டால், நோயாளிகளுக்கு யார் சிகிச்சை அளிப்பது? அவர்கள் ஒன்றும் விலங்குகள் அல்ல. மட்டுமன்றி முறையான மருத்துவ உதவி பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. 14 வருடங்களாக மருத்துவம் சார்ந்து படித்த நான் எனது குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திப்பேன் என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், நோயாளிகளை பற்றி யோசிக்கமாட்டேனா?” என்று பேசியுள்ளார்.

மருத்துவர் ஹம்மம் அல்லோஹ்
மருத்துவர் ஹம்மம் அல்லோஹ்

பாலஸ்தீனத்தில் ஒரு சராசரியான வாழ்க்கை வாழவே உயிரிழந்த மருத்துவர் அல்லோஹ் ஆசைப்பட்டதாக சக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி ஹம்மம் அல்லோஹ் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். இன்னமும் பலர் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் உயிரை பணையம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவர் ஹம்மம் அல்லோஹ்
மழை தொடர்பாக 7 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com