ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்pt web

கண்டனம் தெரிவிக்கும் பாகிஸ்தான்... ஐநாவை நாடும் ஈரான்... அமெரிக்க தாக்குதலில் அடுத்தடுத்த நிகழ்வுகள்

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
Published on

ஈரான் அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் ஃபோர்டோ தளத்தில் ஆறு பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகளும், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் தளங்களில் 30 டொமாகாக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக டிரம்ப் உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு டிரம்ப் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், இஸ்ரேல் மீது டஜன் கணக்கான டிரோன்களை ஈரான் ஏவியிருந்தது. இந்த மோதலில் அமெரிக்கா நேரடியாகப் பங்கெடுத்தது இதுவே முதல் முறையாகும். இத்தகைய சூழலில் தனது அணு சக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து ஈரான் ஐநா சபையில் கடிதம் ஒன்றை சமர்பித்துள்ளது. பல்வேறு நாடுகள் அமெரிக்காவின் தாக்குதலுக்குத் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் - ஈரான்
இஸ்ரேல் - ஈரான்முகநூல்

அமெரிக்காவும் போரில் களமிறங்கியுள்ளது மூலம் பிரச்சினை மேலும் தீவிரடையும் அபாயம் உள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் கவலை தெரிவித்துள்ளார். எந்த பிரச்சினைக்கும் ராணுவ நடவடிக்கைகள் நிரந்தர தீர்வு தராது என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்டுவதே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
“என்ன ஆனாலும் நாங்கள் நிறுத்தமாட்டோம்” அமெரிக்காவுக்கு ஈரானின் பதில்..

ஈரானை அமெரிக்கா நேரடியாக தாக்கியுள்ளது ஆபத்தான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள சீன அரசு தொலைக்காட்சி, மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகள் பிரச்சினைகளுக்கு ஒரு போதும் தீர்வு தந்ததில்லை என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்எக்ஸ் தளம்

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. பாகிஸ்தான் அமெரிக்காவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரிக்கும் சாத்தியங்கள் குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் போருக்குள் நுழைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள பதற்ற சூழல் குறித்து ஜப்பானிலும் தென் கொரியாவிலும் அந்தந்த பிரதமர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ஈரானுக்கு அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், உடனடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள் என்றும் மோதலுக்கு ராஜதந்திர வகையில் தீர்வைக் கண்டறியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
JANANAYAGAN | கையில் வாளுடன் போலீஸ் அதிகாரி அப்போ பகவந்த் கேசரி தானா...?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com