Jananayagan
Jana nayagan | Bagavanth KesariJanaNayagn First Glimpse

JANANAYAGAN | கையில் வாளுடன் போலீஸ் அதிகாரி அப்போ பகவந்த் கேசரி தானா...?

ஏற்கெனவே இந்தப் படம் பாலகிருஷ்ணா நடிப்பில் அனில் ரவிப்புடி இயக்கிய பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்ற பேச்சுக்கள் ஓயவில்லை.
Published on

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகனின் க்ளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர். விஜயின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பு FIRST ROAR என வெளியிட்ட போஸ்டரில் விஜயின் கையில் TVK என டாட்டூ உள்ளது என அப்போதே ஆராய்ச்சியை ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். சரி இப்போது இந்த க்ளிம்ப்ஸில் என்ன உள்ளது? பார்க்கலாம் வாங்க... 

JANANAYAGAN  First Roar Glimpse
JANANAYAGAN VIJAY JANANAYAGAN

வீடியோவின் துவக்கத்திலேயே விஜயின் டிரேட் மார்க் வாசகமான 'என் நெஞ்சில் குடியிருக்கும்' ஒலிக்கிறது. இந்தமுறை நடிகர் விஜய் மட்டுமல்ல ஒரு அரசியல் கட்சியின் தலைவர் விஜய் என்பதையும் மனதில் வைத்து வீடியோவை உருவாக்கி இருக்கிறார்கள். GOAT படத்தின் முதல் சிங்கிள் வரும் போது Campaign, Champagne என மறைத்து மறைத்து அரசியல் பேசியவர் இந்த முறை நேரடியாகவே தன் அரசியல் என்ட்ரியை கூறிவிட்டார். A True Leader Not Rise For Power, But For The People என ஆரம்பத்திலேயே பளிச் என்று வாசகத்தை போட்டு இருக்கிறார்கள்.

ஜனநாயகன் படத்தின் போஸ்டர் வெளியான போது மாஸ்டர் படப்பிடிப்பு சமயத்தில் விஜய் வேன் மீது ஏறி செல்ஃபி எடுப்பத காட்சியை பிரதிபலிப்பது போல் ஒரு போஸ்டரும், எம் ஜி ஆர் நான் ஆணையிட்டால் பாடலில் வருவது போல விஜய் சாட்டை எடுத்து சுற்றுவது போன்ற புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின. படப்பிடிப்பின் போது விஜய் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அப்போதே படத்தில் விஜய் போலீஸ் ஆக வருவார் என்பது உறுதியானது. இப்போது இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ மேலும் அதை வலுப்படுத்தி இருக்கிறது. கலவரம் ஒன்று நடக்கும் வேளையில், அதனை தடுத்து நிறுத்த வரும் போலீஸ், கையில் வாள் ஏந்தி வருகிறார் என்பது போல காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. பின்னணியில் அனிருத் மாஸ் இசை கொடுக்க, தளபதி என்ற விஜயின் பட்டப் பெயர் ஒலிக்கிறது. ரத்தம் தோய்ந்த கரங்களுடன் வாள் பிடித்து அமர்ந்திருக்கிறார் விஜய். இறுதியில் வாளை வைத்து மீசையை நீவி விடுவதாக முடிகிறது. 

பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசை, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, பிரதீப் ராகவ் எடிட்டிங், அனல் அரசு ஸ்டண்ட், அறிவு பாடல்கள் என வலுவான டீம் ஒன்றிணைந்திருக்கிறது.

ஏற்கெனவே இந்தப் படம் பாலகிருஷ்ணா நடிப்பில் அனில் ரவிப்புடி இயக்கிய பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்ற பேச்சுக்கள் ஓயவில்லை. ஆனாலும் படக்குழு அதைப் பற்றி எந்த உறுதியான தகவலையும் கூறவில்லை. பகவந்த் கேசரி படத்திலும் பாலகிருஷ்ணா ஃப்ளாஷ்பேக்கில் போலீஸ் ரோலில் வருவார். இப்போது விஜயும் போலீஸ் என்பதால், இது பகவந்த் கேசரி ரீமேக் தான் என அடித்துக் கூறுகிறார்கள் சில ரசிகர்கள். 

இது ரீமேக் படமோ, இல்லையோ... எதுவாக இருந்தாலும் விஜய் தன்னுடைய அரசியல் வருகை குறித்து படத்தில் பல விஷயங்களை சேர்த்திருப்பார் என்பது மட்டும் உறுதி. ஜனவரி 9 வரட்டும் பார்த்துவிடலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com