\
 singer, 74 lashes for not wearing a hijab in iran
singer, 74 lashes for not wearing a hijab in iran Reuters

ஈரானின் கொடூர முகம் : ஹிஜாப் போடாததால் 74 கசையடி... பிரபல பாடகிக்கு நேர்ந்த கொடுமை !

ஹிஜாப் அணியாததால் ஈரான் பாடகி மற்றும் அவரின் இசை குழுவினருக்கு ஈரான் அரசு 74 கசையடி கொடுத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
Published on: 

கடந்த 2024-ம் ஆண்டு பிரபல ஈரானிய பாடகி பரஸ்தூ அஹ்மதி (Parastoo Ahmadi) என்பவர் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குத் தெற்கே உள்ள கோம்க் (Qom) நகரில், பார்வையாளர்கள் இன்றி ஹிஜாப் அணியாமல் ஒரு பாடல் ஒன்றை படம் பிடித்து அதனை யூடியூபில் வெளியிட்டார். இந்த வீடியோ கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது.

இதனிடையே ஆன்லைன் மூலம் ஆபாசமான மற்றும் ஒழுக்கக்கேடான பாடலை வெளியிட்டு ஹிஜாப் அணியாமல் பொது ஒழுக்கத்திற்குக் குந்தகம் விளைவித்ததாக ஈரான் அரசு அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக ஈரான் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்தது.

இதனிடையே ஜூன் 2026 அன்று பரஸ்தூ அஹ்மதி மற்றும் அவரது இசைக் குழுவினர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டு 74 கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில், செப்டம்பர் 2026-ல் மேல்முறையீட்டு நீதிமன்றமும் இந்தத் தண்டனையை உறுதி செய்தது.

தொடர்ந்து நவம்பர் 23-ம் தேதி அன்று பாடகி பரஸ்தூ அஹ்மதி மற்றும் அவரது இசைக் குழுவை சேர்ந்த 4 பேருக்கு 74 கசையடிகள் வழங்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கசையடி தண்டனையுடன் சேர்த்து, இவர்களுக்குக் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளில் ஈடுபட 2 ஆண்டுகள் தடையும், வெளிநாடு செல்லப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்புகள், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் பல்வேறு மனித உரிமைக் குழுக்கள் இந்தக் கசையடி தண்டனையை மனித உரிமை மீறல் மற்றும் சித்திரவதை எனக் கடுமையாகக் கண்டித்துள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு பொதுஇடத்தில் ஹிஜாப்பைச் சரியாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் ஈரானின் 'அறநெறிக் காவல்துறையால்' (Morality Police) கைது செய்யப்பட்ட 22 வயதான மாஷா அமினி (Mahsa Amini) என்ற பெண் காவல்துறைக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அங்கு பெண்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு, பெண்கள் பொதுவெளியில் தங்கள் ஹிஜாப்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், தலைமுடியை வெட்டியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஈரானின் பாடகி ஒருவர் ஹிஜாப் அணியவில்லை என்று தண்டிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 singer, 74 lashes for not wearing a hijab in iran
'இந்தியாவை பார்த்து அமெரிக்கா கத்துக்கணும்' : புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்... பின்னணி என்ன?
 singer, 74 lashes for not wearing a hijab in iran
இளைஞர்களை திசைதிருப்பும் GTA 6: ஜென்ஸி போராட்டத்துக்கு எதிரான ஆயுதமா? இணையத்தில் அனல்பறந்த விவாதம்!