\
Trump said that the US should learn from India's economy
Trump said that the US should learn from India's economyReuters

'இந்தியாவை பார்த்து அமெரிக்கா கத்துக்கணும்' : புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்... பின்னணி என்ன?

இந்தியாவின் பொருளாதாரத்தை பார்த்து அமெரிக்கா கற்றுக்கொள்ளவேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
Published on: 
Summary

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பாராட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவின் கொள்கைகளை பின்பற்றினால் அமெரிக்கா 14 முதல் 20 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் எனக் கூறினார். இந்தியாவின் வட்டி விகிதம் குறைவாக இருப்பது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்தார்.

1991-ம் ஆண்டு இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொண்ட பின்னர் தொடர்ச்சியாக 1994-ம் ஆண்டில் இருந்து 1997-ம் ஆண்டு வரை முதல்முறையாக தொடர்ச்சியாக 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டி இந்தியா சாதனை படைத்தது.

அதன் பின்னர் 2003 முதல் 2009-ம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரம் தொடர்ந்து 7% முதல் 8% வரை வளர்ந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. 2009-ம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடியால் உலக நாடுகளின் வளர்ச்சி மைனஸ்க்கு சென்ற நிலையிலும் இந்தியா 3 சதவீத வளர்ச்சியை எட்டியது. அப்போதில் இருந்து தற்போது வரை சில விதிவிலக்கு ஆண்டுகளை தாண்டி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது.

ANI

இதன் காரணமாக உலகிலேயே வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவை தவிர பிற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் 3 சதவீதத்துக்குள்ளேயே உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவை பாராட்டி அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவை புகழ்ந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் வட்டி விகிதம் குறைவாக உள்ளதால், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய இந்தியாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

அவ்வாறு செய்தால் அமெரிக்காவில் 14 முதல் 15 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும், ஏன் 20 சதவீத பொருளாதார வளர்ச்சியைக்கூட எட்டிப் பிடிக்க முடியும். சர்வதேச அளவில் அதிக கடன் வாங்கும் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. கடன் வாங்குவதை குறைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தால் மட்டுமே கடன்களை விரைவாக அடைத்து நாட்டை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டுசெல்ல முடியும்" என்று அவர் கூறியுள்ளார்.

Trump said that the US should learn from India's economy
இளைஞர்களை திசைதிருப்பும் GTA 6: ஜென்ஸி போராட்டத்துக்கு எதிரான ஆயுதமா? இணையத்தில் அனல்பறந்த விவாதம்!