கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்கோப்புப்படம்

“போருக்குத் தயாராய் இருக்க வேண்டும்” - ராணுவ வீரர்களுக்கு உத்தரவிட்ட வடகொரிய அதிபர்!

“போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்” என வடகொரியா ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
Published on

ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவையும் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றையும் அடிக்கடி அச்சத்தில் ஆழ்த்திவரும் நாடு, வடகொரியா. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்தபோதிலும், வடகொரியா அதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில்கூட, நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்ததில் வெற்றிபெற்றதாகச் செய்திகள் வெளியாகின. மேலும், அந்நாட்டு ராணுவம் ஏவுகணை சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தென்கொரியாவுடன் அமெரிக்கப் படைகள் அவ்வபோது மேற்கொண்டுவரும் கூட்டுப் போர் பயிற்சிகள், வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலேயே, அந்நாடு ஏவுகணை சோதனைகளில் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக, போருக்குத் தயாராகும் வகையில், வடகொரியா பல்வேறு வகையான ஏவுகணைகளை அதிகளவில் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வடகொரியாவின் ராணுவப் பல்கலைக்கழகத்தை அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், “வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளது. எனவே, கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டிய சூழல் அதிகமாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சமரசமா..? மும்பை அணியில் திடீர் ட்விஸ்ட்! ரோகித்தை காரில் அழைத்துச் சென்ற ஆகாஷ் அம்பானி! #ViralVideo

கிம் ஜாங் உன்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு சொகுசு கார் வழங்கிய ரஷ்ய அதிபர் புதின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com