வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு சொகுசு கார் வழங்கிய ரஷ்ய அதிபர் புதின்!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்ய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
kim jong un , putin
kim jong un , putinpt web

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜான் உன்னிற்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். வடகொரிய செய்தி நிறுவனமான ‘கொரிய மத்திய செய்தி நிறுவனம்’ (Korean Central News Agency (KCNA)) இதை தெரிவித்துள்ளது.

இந்த பரிசு இரு தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட நல்லுறவை பிரதிபலிப்பதாக KCNA குறிப்பிட்டுள்ளது. கார் வழங்கப்பட்டது தொடர்பாக கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் தனது சகோதரர் சார்பாக ரஷ்ய தரப்பிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் காரின் மாடல் குறித்த விபரங்களோ அல்லது புகைப்படங்களோ எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பரில், உச்சி மாநாட்டிற்காக ரஷ்யாவில் உள்ள வோஸ்டோச்னி விண்வெளி நிலையத்திற்கு (Vostochny spaceport) கிம் சென்றிருந்த போது, புதின் தனது ஆரஸ் செனட் லிமோசைன் வாகனத்தை அவரிடம் காட்டியிருந்தார். மேலும் அந்த வாகனத்தில் அமர்ந்து செல்வதற்காக கிம்மையும் புதின் அழைத்திருந்தார்.

kim jong un , putin
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை... மீண்டும் தொடரவுள்ளது டெல்லி விவசாயிகளின் போராட்டம்!

இதனால் ஒருவேளை கிம்மிற்கு புதின் பரிசளித்தது ஆரஸ் செனட் லிமோசன் கார்தானா என்பது குறித்தான கேள்விகள் எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, வட கொரியாவிற்கு ஆட்டோமொபைல் உள்ளிட்ட பொருட்களை வழங்குவது, விற்பனை செய்வது அல்லது பறிமாற்றம் செய்வது ஆகிவற்றிற்கு தடை விதித்திருக்கும் நிலையில் இந்த பரிசு அதனை மீறுவதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சியோலின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் (Seoul's unification ministry) புதின் வழங்கியுள்ள பரிசை ஐநாவின் தடைகளுக்கு உட்பட்ட ஒரு சொகுசு வாகனம் என்றே குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே தொழில்நுட்பம், மீன்பிடித்தல் மற்றும் விளையாட்டு துறைகளுக்கு பொறுப்பான வடகொரிய அரசு அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் ரஷ்யாவிற்கு சென்றுள்ளனர். மாஸ்கோவில் நடைபெறும் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மன்றத்தில் கலந்துகொள்வதற்காகவும், மீன்வளத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான விவாதத்தில் பங்கேற்பதற்காகவும், இரு நாடுகளுக்கு இடையிலான 2024 விளையாட்டு பரிமாற்ற நெறிமுறைகளில் கையெழுத்திடும் விழாவில் கலந்துகொள்வதற்காகவும் அக்குழுக்கள் ரஷ்யாவிற்கு சென்றுள்ளன. இதனை குறிப்பிட்டு இரு நாடுகளும் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி வருவதாக Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிம் மற்றும் புதின் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், இருதரப்பும் தங்களுக்கு இடையே நெருக்கமான உறவுகளை வளர்த்து வருகின்றன. அதேசமயத்தில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடான தென் கொரியாவும் ரஷ்யா மற்றும் வட கொரியா நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் ராணுவ ஒத்துழைப்பு குறித்தான கவலையையும் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com