ஈரான் அதிபர் மரணம்: விபத்தா.. சதியா? மொசாட்டிற்கு தொடர்பு? பின்னணியில் பகீர் கிளப்பும் புதியதகவல்கள்

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இப்ராகிம் ரைசி
இப்ராகிம் ரைசிட்விட்டர்

ஹெல்காப்டரில் தொழில்நுட்பக் கோளாறு

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்பட்டதா? எதிரி நாடுகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதா எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவற்றில் குறிப்பாக, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ஆனால், அந்த 2 ஹெலிகாப்டர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியிருப்பதும், ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் மலையில் மோதியிருப்பதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனாலேயே, இது விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா? எனச் சர்வதேச தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.

அந்த வகையில், இப்ராகிம் ரைசி மரணத்திற்கும் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அதேநேரத்தில், மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், 3 ஹெலிகாப்டர்கள் பயணித்த நிலையில் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மட்டும் விபத்தில் சிக்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால் அதுகுறித்தும் காரணங்கள் சொல்லப்படுகிறது. அவர் பயணித்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததாகவும் அது பழைய ஹெலிகாப்டர் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: 620 ஏக்கர் பரப்பளவு! மொத்த கிராமத்தையே விலைக்கு வாங்கிய குஜராத் அரசு அதிகாரி.. கவலையில் ஆர்வலர்கள்!

இப்ராகிம் ரைசி
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரைசி மரணம்.. இடைக்கால அதிபராக பதவியேற்கிறார் மொக்பர்! யார் இவர்?

இம்ராஹிம் ரைசிக்கு ஈரானிலேயே எதிரிகள்!

இதுபோக, இப்ராகிம் ரைசிக்கு ஈரானிலேயே எதிரிகளின் நீண்ட பட்டியல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் பலரே எதிரிகளாக இருப்பதாகவும், அவர்களிடமிருந்து அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், உள்நாட்டு எதிரிகளே அவரைக் கொல்வதற்கு முயற்சித்திருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.

மேலும், 1988-ல் ஆயிரக்கணக்கானோரின் மரண தண்டனைகளை மேற்பார்வையிடும் ஈரானின் உச்ச தலைவரின் கடினப் பாதுகாவலராக இப்ராகிம் ரைசி இருந்ததாகவும், அதனாலேயே அவர், ’தெஹ்ரானின் கசாப்புக்கடைக்காரர்’ என அழைக்கப்பட்டதாகவும், இதனாலேயே அவருக்கு எதிரிகள் அதிகமானதாகவும் சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: CSK Vs RCB| கை கொடுக்க காத்திருந்த தோனி.. கண்டுகொள்ளாத RCB வீரர்கள்.. தேடிச் சென்ற விராட் கோலி!

இப்ராகிம் ரைசி
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விபத்தில் வெளிநாடுகள்: மொசாட் தொடர்பு?

இதுஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த விபத்தில் வெளிநாடுகள் அல்லது உள்நாட்டு எதிரிகளின் தொடர்பு இருக்கலாம் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதற்கிடையே, சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானிய புரட்சிப்படை தளபதிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் தடுத்து வீழ்த்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், தேவை ஏற்பட்டால் இதைவிட பலமடங்கு பலம் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேவேளை, ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் சொந்தமாக முடிவெடுக்கும் என அந்த நாடும் தெரிவித்திருந்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய ஒரு மாதத்தில் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது மொசாட்டின் சதித்திட்டமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: கர்நாடகா|இறந்துபோன தாய்.. சடலத்துடன் வசித்த மனநலம் பாதித்த மகள்.. அடுத்து நடந்த சோகம்!

இப்ராகிம் ரைசி
ஹிஜாப் அணிய மறுத்த அமெரிக்க ஊடகவியலாளர்: நேர்காணலை ரத்து செய்த ஈரான் அதிபர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com