கர்நாடகா|இறந்துபோன தாய்.. சடலத்துடன் வசித்த மனநலம் பாதித்த மகள்.. அடுத்து நடந்த சோகம்!

கர்நாடகாவில், தாய் இறந்துபோனதுகூடத் தெரியாமல் அந்தச் சடலடத்துடன் 4 நாட்கள் சோறு, தண்ணீரின்றி கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட மகளும் இறந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Death
DeathFile Photo

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்பூர் தாலுகா கோபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 62 வயதான ஜெயந்தி ஷெட்டி. இவரது மகள் பிரகதி ஷெட்டி (32). மனநலம் பாதித்த பிரகதியை, கணவரின் இறப்புக்குப் பிறகு, தாய் ஜெயந்தியே கவனித்து வந்துள்ளார். இதற்கிடையே, ஜெயந்திக்கு சர்க்கை நோய் பாதிப்பு ஏற்பட்டு அதனால் சமீபத்தில் கால் ஒன்றும் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. ஆயினும், மகளைச் சிரமப்பட்டு கவனித்து வந்துள்ளார்.

தற்கொலை
தற்கொலைPT

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஜெயந்தி வீட்டில் லைட்டும் எரியவில்லை, வீடும் திறக்கப்படவில்லை. மேலும், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள், ஜெயந்தியின் செல்போனுக்கு தொடர்புகொண்டுள்ளனர். அப்போது வீட்டுக்குள் இருந்து செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. ஆனால், அழைப்பை எடுத்து ஜெயந்தி பேசவில்லை. இதையடுத்து அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது பிரகதி மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக குந்தாப்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: சீனியரிடம் சீற்றம்.. சிக்ஸர் போனதால் பாதியில் வெளியேற்றம்? ஒரே போட்டியில் வைரலான டெண்டுல்கர் மகன்!

Death
தீயிட்டுக்கொண்டு குழந்தைகளை கட்டியணைத்த தாய்-மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் செயலால் பறிபோன 4 உயிர்கள்

அதன்பேரில் அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஜெயந்தி உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். பிரகதி மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பிரகதியும் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் ஜெயந்தி மற்றும் பிரகதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குந்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

file image

விசாரணையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயந்தி, கடந்த 13-ஆம் தேதியே உயிரிழந்ததாகவும், அவரது தாயார் இறந்தது மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு தெரியவில்லை எனவும், அந்த உடலுடனேயே 3 நாட்களாக பிரகதி, தண்ணீர், உணவு இன்றி இருந்ததாகவும், அதனாலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Death
திருப்பூர்: சடலமாக கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்; சிசிடிவியில் பதிவான பகீர் கொலை காட்சிகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com