Mahabaleshwar
Mahabaleshwartwitter

620 ஏக்கர் பரப்பளவு! மொத்த கிராமத்தையே விலைக்கு வாங்கிய குஜராத் அரசு அதிகாரி.. கவலையில் ஆர்வலர்கள்!

அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, ஒரு கிராமத்தையே அரசு அதிகாரி ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Published on

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜிஎஸ்டி தலைமை ஆணையராகப் பணிபுரிந்து வருபவர், சந்திரகாந்த் வால்வி. இவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள கண்டடி பள்ளத்தாக்கில் உள்ள ஜடானி என்ற கிராமத்தையே விலைக்கு வாங்கியுள்ளார். இந்தக் கிராமத்தின் மொத்த பரப்பளவு, 620 ஏக்கர். ஜடானி கிராமத்தின் நிலப்பகுதிகளை அரசு கையகப்படுத்தப் போவதாகக் கூறி, அக்கிராம மக்களை ஏமாற்றி ஜிஎஸ்டி ஆணையர் சந்திரகாந்த் வால்வி வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

Mahabaleshwar
Mahabaleshwar

இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், இனிமேல் அந்த மரங்கள் வெட்டப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பல சட்டவிரோத கட்டடங்கள் கட்டுப்பட்டு வருவதாகவும், அதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, ஒரு கிராமத்தையே அரசு அதிகாரி விலைக்கு வாங்கியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: கர்நாடகா| ஓடும் பைக்கில் எல்லை மீறிய காதல் ஜோடி.. வைரலால் வலைவீசிய போலீஸ்! #ViralVideo

Mahabaleshwar
துபாயில் ரூ.1347 கோடிக்கு விலை உயர்ந்த பங்களாவை வாங்கிய முகேஷ் அம்பானி-இவ்வளவு சிறப்புகளா?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com